search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Oorvasi"

    • பா.ரஞ்சித் தயாரிப்பில் அட்டகத்தி தினேஷ் மற்றும் ஊர்வசி நடிப்பில் "ஜே பேபி" படம் நாளை வெளியாக உள்ளது.
    • ஹன்சிகா மோத்வானி நடிப்பில் நாளை வெளியாக உள்ளது கார்டியன் திரைப்படம்.

    பா.ரஞ்சித் தயாரிப்பில் அட்டகத்தி தினேஷ் மற்றும் ஊர்வசி நடிப்பில் "ஜே பேபி" படம் நாளை வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை சுரேஷ் மாரி இயக்கியுள்ளார். ஒரு தாய் திடீரென்று தன் குடும்பத்தை விட்டு யாரிடமும் சொல்லாமல்  வெளியே செல்கிறார். மகன் எப்படி அவரை கண்டுபிடித்தார் என்பதே கதைக் களம்.

    ஹன்சிகா மோத்வானி நடிப்பில் நாளை வெளியாக உள்ளது கார்டியன் திரைப்படம். இப்படத்தில் ஹன்சிகா திகிலூட்டும் வேடத்தில் நடித்துள்ளார். சரவணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஒரு திகில் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்த ஷில்பா மஞ்சுனாத் அடுத்து சமூத்திரகனியுடன் சேர்ந்து சிங்கப்பெண்ணே என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சதீஷ் குமார் இயக்கியுள்ளார். நாளை இந்த படம் வெளியாக இருக்கிறது.

    மேகனா இலன், சார்லி, இமான் அண்ணாச்சி நடிப்பில் நாளை வெளியாகும் படம் "அரிமாபட்டி சக்திவேல்". ரமேஷ் கந்தசாமி என்பவர் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இயக்குனர் பிரசாத் ராமர் இயக்கத்தில் செந்தூர் பாண்டியன், ப்ரீத்தி கரண், சுரேஷ் மதியழகன், தமிழ் செல்வி என பல பிரபலங்கள் நடித்திருக்கும் திரைப்படம் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே. பாடகர் மற்றும் இசையமைப்பாளார் ப்ரதீப் குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படமும் நாளை வெளியாக உள்ளது. 

    ராம் பாலா இயக்கத்தில் சந்தானம் - ஷிர்தா சிவதாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் `தில்லுக்கு துட்டு 2' படத்தின் விமர்சனம். #DhillukuDhuddu2Review #DhillukuDhuddu2 #Santhanam #ShrithaShivadas
    ஆட்டோ டிரைவரான சந்தானம் தனது மாமா மொட்ட ராஜேந்திரனுடன் வசித்து வருகிறார். தினமும் குடித்து விட்டு ரகளை செய்யும் இவர்களின் தொல்லை தாங்க முடியாமல் அந்த பகுதி மக்கள் இருவரையும் அடக்குவதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அதற்கான முயற்சியில் இறங்குகின்றனர். மறுபுறத்தில் டாக்டராக இருக்கிறார் நாயகி ஷிர்தா சிவதாஸ். ஷிர்தாவிடம் யாராவது காதலை சொன்னால், அவரை பேய் அடித்துவிடுகிறது.

    இந்த நிலையில், அதே பகுதியில் வசித்து வரும் டி.எம்.கார்த்திக், சந்தானத்தின் தொல்லை தாங்க முடியாமல், சந்தானத்தை, ஷர்தாவுடன் கோத்துவிட திட்டமிடுகின்றனர். அதற்கான சந்தர்ப்பமும் அமைகிறது. ஷிர்தாவை பார்த்தவுடன் சந்தானத்திற்கு அவர் மீது காதல் வந்துவிடுகிறது. ஒரு கட்டத்தில் தனது காதலை சொல்ல சந்தானத்தையும் பேய் அடித்துவிடுகிறது.

    கேரளாவில் மந்திரவாதியாக இருக்கும் ஷிர்தாவின் அப்பாவை பார்த்து பேசினால் தான் எல்லாம் சரியாகும் என்று தனது மாமா மொட்டை ராஜேந்திரனுடன் கேரளா செல்கிறார் சந்தானம்.



    அங்கு ஷிர்தாவின் தந்தையை பார்த்து தனது காதல் பற்றி பேசினாரா? சந்தானத்தின் காதலுக்கு ஷிர்தாவின் அப்பா பச்சைக் கொடி காட்டினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே தில்லுக்கு துட்டுவின் மீதிக்கதை.

    நீண்ட இடைவேளைக்கு பிறகு சந்தானம் தனது வழக்கமான காமெடி மூலம் ரசிகர்களை திருப்திபடுத்தி இருக்கிறார். காமெடி, ஆக்‌ஷன், காதல் என அனைத்திலும் ஓரளவுக்கு திருப்திபடுத்தியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஷிர்தா சிவதாசுக்கு தமிழில் முதல் படம் என்றாலும், அவர் தனது கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு.

    சந்தானத்தின் மாமாவாக வரும் மொட்ட ராஜேந்திரனின் கதாபாத்திரமும் சிரிக்க வைக்கிறது. குறிப்பாக இருவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டி தான் படத்தின் ஹைலைட். இருப்பினும் ஒரு சில இடங்களில் ஏமாற்றத்தையும் தருகிறது. மாஸ்டர் சிவசங்கர், ஐயப்பா பைஜூ, டி.எம்.கார்த்திக், ராமர், தனசேகர் என மற்ற கதாபாத்திரங்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள்.



    தில்லுக்கு துட்டு படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதன் அடுத்த பாகமாக இந்த படத்தை உருவாக்கி இருக்கும் ராம் பாலா ரசிர்களை ஓரளவுக்கு திருப்திபடுத்தியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். பேயை கலாய்க்கும்படியாக வரும் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. குறிப்பாக இரண்டாவது பாதி மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளில் சிரிக்க வைத்திருக்கிறார். அனைவரையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்.

    ஷபீரின் பின்னணி இசை படத்திற்கு பலம், பாடல்களும் கேட்கும் ரகம் தான். தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `தில்லுக்கு துட்டு 2' ஒர்க்அவுட்டு. #DhillukuDhuddu2Review #DhillukuDhuddu2 #Santhanam #ShrithaShivadas

    ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் - ஷிர்தா சிவதாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் `தில்லுக்கு துட்டு 2' படத்தின் முன்னோட்டம். #DhillukuDhuddu2 #Santhanam #ShrithaShivadas
    ஹாண்ட்மேட் பிலிம்ஸ் சார்பில் சந்தானம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `தில்லுக்கு துட்டு 2'.

    சந்தானம் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஷிர்தா சிவதாஸ் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். ஊர்வசி, மொட்ட ராஜேந்திரன், மாஸ்டர் சிவசங்கர், மாரிமுத்து, விஜய் டிவி ராமர், விஜய் டிவி தனசேகர், ஜெயப்பிரகாஷ், பிபின், சி.எம்.கார்த்திக், பிரசாந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    இசை - ஷபீர், ஒளிப்பதிவு - திப்பாக்குமார் பதி, பாடல்கள் - அருண்பாரதி & கானா வினோத், படத்தொகுப்பு - மாதவன், கலை இயக்கம் - ஏ.ஆர்.மோகன், சண்டைப்பயிற்சியாளர் - ஹரி தினேஸ், நடனம் - சாண்டி, ஆடை வடிவமைப்பு - ஆர்.பிரவீன்ராஜ், இணை தயாரிப்பு - சி.ரமேஷ்குமார், வெளியீடு - டிரைடண்ட் ஆர்ட்ஸ், தயாரிப்பு - ஹாண்ட்மேட் பிலிம்ஸ், தயாரிப்பாளர் - என்.சந்தானம், எழுத்து, இயக்கம் - ராம்பாலா.



    படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சந்தானம் பேசியதாவது,

    ‘‘ பொதுவாக, பேயை பார்த்துதான் மனிதர்கள் பயப்படுவார்கள். ஆனால், தில்லுக்கு துட்டு 2 படத்தில் மனிதர்களை பார்த்து பேய் பயப்படுவது போல், ‘தில்லுக்கு துட்டு 2’ படத்தின் கதை நகைச்சுவையாக அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் நான் ஆட்டோ டிரைவராக வருகிறேன்.

    நான், தொடர்ந்து கதாநாயகனாகவே நடிப்பேன். நகைச்சுவை நாயகனாக நடித்து ரசிகர்களை திருப்தி செய்வதில், எனக்கு மகிழ்ச்சி. நான் நடித்து முடித்த சில படங்கள் திரைக்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் நான் அல்ல. அந்த படங்களில் நான் நடித்து முடித்துவிட்டேன். ‘தில்லுக்கு துட்டு 2’ என் சொந்த படம் என்பதால், அதை குறிப்பிட்ட தேதியில் திரைக்கு கொண்டு வருகிறேன்.’’ இவ்வாறு சந்தானம் கூறினார். 

    படம் வருகிற பிப்ரவரி 7-ஆம் தேதி திரைக்கு வருகிறது. #DhillukuDhuddu2 #Santhanam #ShrithaShivadas

    ×