என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Army attack"

    • உலகின் மிகப்பெரிய, மிகவும் சக்திவாய்ந்த கப்பல்கள் எங்களிடம் உள்ளன.
    • இன்னும் சில நாட்களில், நாங்கள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வோம் என்று நம்புகிறோம்.

    மத்திய கிழக்கு நாடான ஈரானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து, கடந்த டிசம்பர் மாதம் முதல், அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர்.

    போராட்டத்தை ஒடுக்க ஈரான் அரசு மேற்கொண்ட நடவடிக்கையில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 27 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது.

    இதைதொடர்ந்து அமெரிக்க கடற்படையின் விமானம் தாங்கி கப்பல்கள், போர்க் கப்பல்கள் மேற்கு ஆசிய கடற்பகுதிக்குள் நுழைந்துள்ளன. இதனால் அமெரிக்கா-ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், அமெரிக்கப் படைகள் ஈரானை தாக்கினால், அதன் விளைவுகள் மத்திய கிழக்கு முழுவதும் பரவும் என்றும் அமெரிக்கர்கள் ஒரு போரைத் தொடங்கினால், இந்த முறை அது ஒரு பிராந்தியப் போராக இருக்கும். ஈரானை தாக்கும் அல்லது துன்புறுத்தும் எவருக்கும் தகுந்த பதிலடி கொடுப்போம் என்றும் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி எச்சரிக்கை விடுத்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஈரான் அமெரிக்காவுடன் விரைவில் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளும் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். பேச்சுவார்த்தை மூலம் இந்த பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர நான் விரும்புகிறேன். ஆனால் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், அமெரிக்கா இந்தப் பகுதியில் நிலை நிறுத்தி வைத்திருக்கும் ராணுவத்தை பயன்படுத்தத் தயாராக இருக்கிறேன்.

    உலகின் மிகப்பெரிய, மிகவும் சக்திவாய்ந்த கப்பல்கள் எங்களிடம் உள்ளன. இன்னும் சில நாட்களில், நாங்கள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வோம் என்று நம்புகிறோம்.

    அப்படி ஒப்பந்தம் செய்யவில்லை என்றால், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி "இது பிராந்தியப் போராக" மாறும் என்று சொன்னது சரியா இல்லையா என்பது தெளிவாகிவிடும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவம் இன்று நடத்திய அதிரடி தாக்குதலில் எல்லையில் செயல்பட்டு வந்த பாகிஸ்தான் தளம் அழிக்கப்பட்டது. #JammuKashmir
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஷாபூர் மற்றும் கெமி பகுதிகளில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி இந்திய பகுதியில் தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இந்திய வீரர் ஹரி வாக்கர் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி வீர மரணம் அடைந்தார்.



    இந்நிலையில், இந்திய ராணுவம் பாகிஸ்தான் தளங்களை குறிவைத்து அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஜம்மு காஷ்மீரின் அக்னூர் பிரிவில் செயல்படும் பாகிஸ்தான் தளம் ஒன்று அழிக்கப்பட்டது. இதுதொடர்பான வீடியோ ஒன்றையும் இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் நாட்டின் தேசிய கொடி தலைகீழாக பறக்கிறது.  இது தீவிர ஆபத்தின் அடையாளம் என ராணுவம் தெரிவித்து உள்ளது. #JammuKashmir
    ×