ஆப்கானிஸ்தான் - ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 17 தலிபான் பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்குப்பகுதியில் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 17 பயங்கரவாதிகள் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயங்கரவாதிகள் மீது ராணுவம் தாக்குதல்
பயங்கரவாதிகள் மீது ராணுவம் தாக்குதல்
Published on

காபுல்:

ஆப்கானிஸ்தானின் காஸ்னி மாகாணத்தின் மொஷாகி பகுதியில் உள்ள தலிபான் பயங்கரவாதிகள் மீது ராணுவத்தினர் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தினர்.

ஆப்கன் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 17 பயங்கரவாதிகள் பலியாகினர். மேலும் இந்த தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களிடம் இருந்து வாகனங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com