ஏமனில் அரசு படைகளுடனான மோதலில் 8 ஹவுத்தி போராளிகள் பலி

ஏமன் நாட்டின் டைஸ் பகுதியில் அரசு படைகளுடனான மோதலில் 8 ஹவுத்தி போராளிகள் பலியாகினர். ஒரு டஜனுக்கும் மேற்பட்ட போராளிகள் காயமடைந்தனர்.
ஏமனில் அரசு படைகளுடனான மோதலில் 8 ஹவுத்தி போராளிகள் பலி
Published on

சனா:

ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சனா உள்பட பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்கள் வைத்து அந்த பகுதிகைளை சுற்றி சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர்.

சர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. அவர்கள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் சில நேரங்களில் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படுகின்றனர்.

இந்நிலையில், ஏமன் நாட்டின் டைஸ் பகுதியில் ஹவுத்தி புரட்சிப் படையினரை குறிவைத்து ஏமன் நாட்டு அரசு படைகள் தாக்குதல் நடத்தியது.

இந்த மோதலில் ஹவுத்தி புரட்சிப் படையை சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு டஜனுக்கு மேற்பட்ட போராளிகள் படுகாயம் அடைந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com