

காபுல்:
ஆப்கானிஸ்தானின் காஸ்னி மாகாணத்தின் அண்டார் பகுதியில் உள்ள தலிபான் பயங்கரவாதிகள் மீது ராணுவத்தினர் நேற்று வான்வெளி தாக்குதல் நடத்தினர்.
ஆப்கன் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் தளபதி உள்பட 9 பயங்கரவாதிகள் பலியாகினர். மேலும் இந்த தாக்குதலில் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பில்லை என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.