ஆப்கானிஸ்தான் - விமானப்படை நடத்திய வான்வழி தாக்குதலில் 13 பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தானில் விமானப்படை நடத்திய வான்வழி தாக்குதலில் 13 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் - விமானப்படை நடத்திய வான்வழி தாக்குதலில் 13 பயங்கரவாதிகள் பலி
Published on

காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசு படையினருக்கும் இடையே தொடர்ந்து நீண்டகால போர் நீடித்து வருகிறது.  பயங்கரவாத குழுக்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அதிபர் விடுத்த அழைப்பு தோல்வியில் முடிந்தது. ஆனாலும் தலிபான் பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் பர்யாப் மாகாணத்தின் பசந்த்கோட் மாவட்டத்தில் பதுங்கியுள்ள தலிபான் பயங்கரவாதிகளை குறிவைத்து அந்நாட்டு விமானப்படை வான்வழி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 13 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் இருவர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com