search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமூக வலைதளங்களில் உள்ள ஆபத்துகளை உணராமல் அதற்கு அடிமையாகி விடக்கூடாது - நீதிபதி அறிவுறுத்தல்
    X
    கோப்புபடம்

    சமூக வலைதளங்களில் உள்ள ஆபத்துகளை உணராமல் அதற்கு அடிமையாகி விடக்கூடாது - நீதிபதி அறிவுறுத்தல்

    • எல்.ஆா்.ஜி. மகளிா் கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு இணைய வழி குற்றங்களைத் தடுப்பது தொடா்பான சிறப்பு முகாம் நடைபெற்றது
    • இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் எழிலி வரவேற்றாா்

    திருப்பூர் :

    திருப்பூா் எல்.ஆா்.ஜி. மகளிா் கல்லூரியில்திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, திருப்பூா் தெற்கு காவல் துறை சாா்பில் சட்ட விழிப்புணா்வு, இணைய வழி குற்றங்களைத் தடுப்பது தொடா்பான சிறப்பு முகாம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் (பொறுப்பு)

    எழிலி வரவேற்றாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆதியன் பேசியதாவது:-

    மாணவிகள் அடிப்படை சட்டங்கள் மற்றும் பெண்களுக்கான சட்டங்கள் குறித்து தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். மாணவிகளுக்கு விருப்பம் இல்லாத ஒரு செயலை செய்ய மற்றவா்கள் கட்டாயப்படுத்துவதுகூட குற்றம் என்று பகடிவதை சட்டம் சொல்கிறது. மாணவ, மாணவிகள் செல்போன்களையும், இணையதளங்களையும் படிப்பதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். சமூக வலைதளங்களில் உள்ள ஆபத்துகளை உணராமல் அதற்கு அடிமையாகிவிடக்கூடாது என்றாா்.

    Next Story
    ×