என் மலர்
நீங்கள் தேடியது "100 வயது"
- ஜப்பானில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ம் தேதி முதியோர் தினமாக கொண்டாடப்படுகிறது.
- இந்த ஆண்டில் மட்டும் புதிதாக 52,310 பேர் 100 வயதை தாண்டி உள்ளனர்.
டோக்கியோ:
உலகிலேயே வயதானவர்கள் அதிகம் வசிக்கும் நாடு ஜப்பான். அங்கு ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ம் தேதி முதியோர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு முதியோர்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
1963-ம் ஆண்டு இந்த கணக்கெடுப்பு தொடங்கியது. அப்போது 100 வயதானவர்களின் எண்ணிக்கை 153 ஆக இருந்தது. அதன்படி, இந்த ஆண்டுக்கான புள்ளி விவரங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் 100 வயதானவர்களின் எண்ணிக்கை சுமார் 1 லட்சமாக அதிகரித்துள்ளது. அவர்களில் 88 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.
இந்த ஆண்டில் மட்டும் புதிதாக 52,310 பேர் 100 வயதை தாண்டி உள்ளனர். அவர்களுக்கு பிரதமர் கையால் வாழ்த்து மடல், பரிசுத்தொகை மற்றும் வெள்ளிக்கோப்பை ஆகியவை முதியோர் தினமான நாளை வழங்கப்படுகிறது.
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி டகாமரோ புகோகா கூறுகையில், உலகின் மற்ற பகுதிகளில் சாப்பிடும் உணவுகளில் உப்பு மற்றும் சர்க்கரை அதிகளவில் கலந்துள்ளது. இதற்கு மாற்றாக மீன், காய்கறி போன்ற ஆரோக்கியமான உணவுகளை ஜப்பானிய மக்கள் அதிகம் எடுத்துக் கொள்கின்றனர். நடைபயிற்சியும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால்தான் மற்ற நாடுகளை விட ஜப்பானிய முதியவர்கள் சுறுசுறுப்பாக செயல்படுகின்றனர் என்றார்.
- ஹரால்டு- ஜீன் தம்பதிக்கு பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் விருந்து அளித்துள்ளார்.
- 100 வயதில் காதலியை கரம் பிடித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல்
இரண்டாம் உலக போரில் பங்கேற்ற அமெரிக்க முன்னாள் போர் வீரர் ஒருவர் தனது 100 வயதில் காதலியை கரம் பிடித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஹரால்டு டெரன்ஸ் என்ற அந்த வீரர் தனது 100-வது வயதில், 96 வயதாகும் தனது காதலியான ஜீன்ஸ்வெர்லினை கரம் பிடித்துள்ளார்.
பிரான்ஸ்சில் நார்மாண்டி பகுதியில் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த நகரத்தின் மேயர், ஹரால்டு டெரன்ஸ்-ஜீன்ஸ்வெர்லின் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் சில பயனர்கள், இந்த வயதில் இது தேவையா? என பதிவிட்டனர்.
அதற்கு ஜீன் பதில் அளிக்கையில் காதல் என்பது இளைஞர்களுக்கு மட்டும்தானா? எங்களுக்கும் அந்த உணர்வு உண்டு என்றார். இந்நிலையில் ஹரால்டு- ஜீன் தம்பதிக்கு பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் விருந்து அளித்துள்ளார்.






