அ.தி.மு.க. பிரமுகர் எம்.ஜி. ராமச்சந்திரன் இல்ல திருமண விழா

அ.தி.மு.க. பிரமுகர் எம்.ஜி. ராமச்சந்திரன் இல்ல திருமண விழா மதுரையில் விமரிசையாக நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர்கள்-முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
மணமக்களை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வாழ்த்தினர்.  
மணமக்களை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வாழ்த்தினர்.  
Published on

மதுரை

மதுரை மத்திய 6-ம் பகுதி அ.தி.மு.க. செயலாளரும், ஆர்.கே. குரூப் ஆப் கம்பெனிஸ் மற்றும் ஸ்ரீ வெற்றி பார்மா மேனேஜிங் டைரக்டர்மான எம்.ஜி. ராமச்சந்திரன்-கொன்னலட்சுமி தம்பதியின் மகள் ராஜிக்கும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் -உமா மகேஸ்வரி தம்பதி மகனுமான மோகன் ராஜூக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது.

இவர்களது திருமணம் நேற்று (20-ந் தேதி) அழகர் கோவில் ரோடு சூர்யா நகரில் உள்ள விஜய் கிருஷ்ணா மஹாலில் நடந்தது. திருமணத்தை மதுரை மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத் துணைத் தலைவர் எம். கணேசன் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

திருமண விழாவிற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமை தாங்கினார். அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தார்.

மாவட்ட நிர்வாகிகள் எம்எஸ். பாண்டியன், அண்ணாதுரை, ராஜா, ஜெயபாலன், சக்தி மோகன், குமார், சோலை எம். ராஜா, சக்தி விநாயகர் பாண்டியன், தளபதி மாரியப்பன், பரவை ராஜா, திரவியம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் அரசியல் கட்சியினர், தொழிலதி பர்கள், முக்கிய பிரமுகர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமண ஏற்பாடுகளை எம்.ஜி. ராமச்சந்திரன்- கொன்னலட்சுமி மற்றும் குடும்பத்தினர் உதயகுமார்- புனிதா, நந்தினி ஆகியோர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com