என் மலர்
சினிமா செய்திகள்

BAFTA திரைப்பட விருதுகள்: 14 பிரிவுகளில் பரிந்துரை - முதலிடத்தில் உள்ள 'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்'
'சின்னர்ஸ்' திரைப்படம் 13 பரிந்துரைகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகள் (BAFTA) விழா அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
இதில் லியோனார்டோ டிகாப்ரியோ நடித்த 'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' திரைப்படம், சிறந்த படம், சிறந்த இயக்குனர் உட்பட 14 பரிந்துரைகளைப் பெற்று போட்டியில் முதல் இடத்தில் உள்ளது.
'சின்னர்ஸ்' திரைப்படம் 13 பரிந்துரைகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. 'ஹாம்நெட்' , 'மார்ட்டி சுப்ரீம்' மற்றும் 'சென்டிமென்டல் வேல்யூ' ஆகிய படங்களும் சிறந்த திரைப்படத்திற்கான போட்டியில் உள்ளன.
இந்த விருது வழங்கும் விழா பிப்ரவரி 22 அன்று லண்டனில் நடைபெறவுள்ளது.
இதற்கிடையே மார்ச் மாதம் அமெரிக்காவில் நடைபெற உள்ள ஆஸ்கார் விருதுகளுக்கான இறுதிப்பட்டியலில் சின்னர்ஸ் திரைப்படம் 16 பிரிவுகளிலும், ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர் 13 பிரிவுகளிலும் போட்டிக்கு தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story






