PIRACY-யால் திரைத்துறையை விட பொதுமக்களுக்குதான் பெரிய இழப்பு - இயக்குநர் ராஜமவுலி

பிற பெட்டிங் ஆப்களை பயன்படுத்தும் படி ஊக்குவித்து அதன் மூலம் பல லட்சம் வருமானம் ஈட்டியுள்ளனர். தனிப்பட்ட தகவல்களை பெரும் தொகைக்கு சைபர் குற்றவாளிகளுக்கு விற்பனை செய்துள்ளனர்.
PIRACY-யால் திரைத்துறையை விட பொதுமக்களுக்குதான் பெரிய இழப்பு - இயக்குநர் ராஜமவுலி
Published on

பைரசி இணையதளங்களின் வழியாக பல்வேறு மொழி திரைப்படங்களை சட்டவிரோதமாக வெளியிட்டு வந்த கும்பலின் தலைவனை ஐதராபாத் சைபர் கிரைம் பிரிவு கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட கும்பலின் தலைவன் ரவி இமாண்டியிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.

65 இணையதளங்களின் வழியாக சட்டவிரோதமாக திரைப்படங்களை வெளியிட்டு அதன் மூலம் ரவி சுமார் ரூ 20 கோடி வரை சம்பாதித்துள்ளார்.

சட்டவிரோதமாக திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் பயனர்களிடம் பிற பெட்டிங் ஆப்களை பயன்படுத்தும் படி ஊக்குவித்து அதன் மூலம் பல லட்சம் வருமானம் ஈட்டியுள்ளனர்.

இந்த ஆப்களை பதிவிறக்கம் செய்யும் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் , வங்கி கணக்கு விபரங்கள் உள்ளிட்ட தகவல்களை சேகரித்து அவற்றை பெரும் தொகைக்கு சைபர் குற்றவாளிகளுக்கு விற்பனை செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், பைரசி குறித்து பேசிய இயக்குநர் ராஜமவுலி, "புதுப்படங்களை இலவசமாக பார்க்கலாம் என பைரசி தளங்களில் மக்கள் படங்களை டவுன்லோடு செய்கிறார்கள். இங்கு எதுவும் இலவசம் கிடையாது. உங்களது தனிப்பட்ட தரவுகளை திருடி அதன்மூலம் அவர்கள் பணம் ஈட்டுகிறார்கள். Ibomma தளம் வைத்திருந்தவரை கைது செய்திருக்கலாம். ஆனால் இதே போல இன்னும் பல தளங்கள் உள்ளன. பைரசியால் திரைத்துறையை விட பொதுமக்களுக்குதான் பெரிய இழப்பு" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com