என் மலர்
நீங்கள் தேடியது "mm keeravani"
- தெலுங்கு சினிமாவின் இசை ஜாம்பவமாக இருப்பவர் எம்.எம் கீரவாணி.
- இயக்குநர் ராஜ மௌலியின் மாமா ஆவார் சிவ சக்தி தத்தா.
தெலுங்கு சினிமாவின் இசை ஜாம்பவமாக இருப்பவர் எம்.எம் கீரவாணி. இவரது தந்தை மற்றும் மிகச்சிறந்த பாடலாசிரயராவார் சிவ சக்தி தத்தா. இவர் இன்று உடல்நிலைக் குறைவால் காலமானார். இவருக்கு வயது 92 ஆகும்.
திரைக்கதை எழுத்தாளரான விஜயந்திர பிரசாத்தின் மூத்த சகோதரர் மற்றும் இயக்குநர் ராஜ மௌலியின் மாமா ஆவார் சிவ சக்தி தத்தா.
இவர் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். பாகுபலி, RRR, மகதீரா, ராஜன்னா மற்றும் ஸ்ரீ ராமதாசு போன்ற படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். இவர் 2007 ஆம் ஆண்டு சந்திராஸ் படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.
இவரது பாடல் வரிகள் கலாச்சார செழுமை மற்றும் தத்துவ ஆழம் கொண்டுள்ளாத இருக்கும். இவரது இறப்பு திரைத்துறையை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரைத்துறை சார்ந்தவர்களும் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அவர்களது இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.
அவரது இறுதி சடங்கு இன்று மாலை ஐதராபாத்தில் நடக்க இருக்கிறது.
- பவர் ஸ்டார் பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு.
- ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி படத்தின் இசையமைப்பை மேற்கொள்கிறார்.
பவர் ஸ்டார் பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு. இத்திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை அதிகரித்திருக்கிறது.
பவன் கல்யாணின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் படம் என்பதால் ரசிகர்கள் ஏகோபித்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி படத்தின் இசையமைப்பை மேற்கொள்கிறார்.
ஜோதி கிருஷ்ணா, கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் மேகா ஸூர்யா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.எம். ரத்த்னம் தயாரிக்கும் ' ஹரி ஹர வீர மல்லு . திரைப்படம் வரும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
- 2023-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை குடியரசு தலைவர் வழங்கினார்.
- இதில் மறைந்த பாடகி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றாக பத்ம விருது கருதப்படுகிறது. இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் பல்துறை சார்ந்த ஆளுமைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ஆம் ஆண்டிற்கான பத்ம விருது குடியரசு தினத்தையொட்டி 106 பேருக்கு அறிவிக்கப்பட்டது. பத்ம விருது வென்றவர்களுக்கு விருது வழங்கும் விழா டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்நிலையில், மறைந்த பாடகி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இதனை அவரது உறவினர் பெற்றுக் கொண்டார். மேலும், இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணிக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இன்போசிஸ் நாராயண மூர்த்தி மனைவி சுதா மூர்த்திக்கு சமூக பணிக்காக பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இந்த விருதுகளை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.






