'நாட்டு..நாட்டு..' பாடலுக்கு இசையமைத்த கீரவாணிக்கு பத்ம ஸ்ரீ விருது.. குடியரசு தலைவர் வழங்கினார்

2023-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை குடியரசு தலைவர் வழங்கினார்.இதில் மறைந்த பாடகி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
எம்.எம்.கீரவாணி -திரவுபதி முர்மு
எம்.எம்.கீரவாணி -திரவுபதி முர்மு
Published on

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றாக பத்ம விருது கருதப்படுகிறது. இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் பல்துறை சார்ந்த ஆளுமைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ஆம் ஆண்டிற்கான பத்ம விருது குடியரசு தினத்தையொட்டி 106 பேருக்கு அறிவிக்கப்பட்டது. பத்ம விருது வென்றவர்களுக்கு விருது வழங்கும் விழா டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்நிலையில், மறைந்த பாடகி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இதனை அவரது உறவினர் பெற்றுக் கொண்டார். மேலும், இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணிக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இன்போசிஸ் நாராயண மூர்த்தி மனைவி சுதா மூர்த்திக்கு சமூக பணிக்காக பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இந்த விருதுகளை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.

Related Stories

X

Maalai Malar
www.maalaimalar.com