search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vani jeyaram"

    • 2023-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை குடியரசு தலைவர் வழங்கினார்.
    • இதில் மறைந்த பாடகி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

    இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றாக பத்ம விருது கருதப்படுகிறது. இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் பல்துறை சார்ந்த ஆளுமைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ஆம் ஆண்டிற்கான பத்ம விருது குடியரசு தினத்தையொட்டி 106 பேருக்கு அறிவிக்கப்பட்டது. பத்ம விருது வென்றவர்களுக்கு விருது வழங்கும் விழா டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்நிலையில், மறைந்த பாடகி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இதனை அவரது உறவினர் பெற்றுக் கொண்டார். மேலும், இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணிக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இன்போசிஸ் நாராயண மூர்த்தி மனைவி சுதா மூர்த்திக்கு சமூக பணிக்காக பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இந்த விருதுகளை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.

    • பிரபல பாடகி வாணி ஜெயராம் சமீபத்தில் அவரது வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
    • இவரது உடல் 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

    வேலூரைச் சேர்ந்த இசை குடும்பத்தில் பிறந்த வாணி ஜெயராம் 1974 -ஆம் ஆண்டு ஆண்டு வெளியான 'தீர்க்க சுமங்கலி' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார். 'வீட்டுக்குவந்த மருமகள்', 'சொல்லத்தான் நினைக்கிறேன்' முதலான படங்களில் பாடியிருந்தாலும் 'தீர்க்கசுமங்கலி' படமே முதலில் வந்ததால், அதில் இடம்பெற்ற இவர் பாடிய பாடலே, முதல்பாடலானது.

    தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் கிட்டத்தட்ட 10,000-க்கும் அதிகமான பாடல்களை இவர் பாடியுள்ளார். சிறந்த பாடகிக்கான தேசிய விருதையும் பல்வேறு மாநில அரசுகள் விருதுகளையும் பெற்றுள்ள வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

    இவர் சமீபத்தில் சென்னையில் உள்ள அவரது வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்தார். இவரது உடல் காவல்துறை சார்பில் 10 காவலர்கள் 3 சுற்றுகளாக 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழக சட்டசபை இன்று கூடியதும் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    இதேபோல் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாரிமுத்து, தங்கவேலு, சீனிவாசன், முன்னாள் அமைச்சர் உபயதுல்லா ஆகி யோரது மறைவுக்கு இரங்கல் குறிப்புகளும் கொண்டு வரப்பட்டன. இவர்கள் மறைவுற்ற செய்தியை இப்பேரவைக்கு வருத்தத்துடன் தெரிவிப்ப தாக சபாநாயகர் அப்பாவு கூறினார். மறைந்த உறுப்பினர்களின் மறைவால் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் இப்பேரவை தெரிவித்துக் கொள்வதாக கூறி உறுப்பினர்கள் அனைவரும் 2 மணித்துளிகள் எழுந்து நின்று அமைதிகாத்தனர்.

    • பிரபல பாடகி வாணி ஜெயராம் நேற்று வீட்டில் தவறி விழுந்து காலமானார்.
    • வாணி ஜெயராமின் உடல் சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் சற்று நேரத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

    தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (வயது 78), நேற்று சென்னையில் உள்ள தனது வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதனை போலீசார் மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து உள்ளனர். வாணி ஜெயராம் மறைவுக்கு தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

     


    அவரது உடல் சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்பட உள்ளது. தற்போது அவரின் உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டு வருகிறது. காவல்துறை சார்பில் 30 குண்டுகள் முழங்க வாணி ஜெயராம் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. 10 காவலர்கள் 3 சுற்றுகளாக 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தினர்.

    சற்று நேரத்தில் வாணி ஜெயராமின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய திரையுலகின் முன்னணி பாடகி வாணி ஜெயராம் நேற்று காலமானார்.
    • இவரது இறப்பிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    வேலூரைச் சேர்ந்த இசை குடும்பத்தில் பிறந்த வாணி ஜெயராம் 1974 -ஆம் ஆண்டு ஆண்டு வெளியான 'தீர்க்க சுமங்கலி' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார். 'வீட்டுக்குவந்த மருமகள்', 'சொல்லத்தான் நினைக்கிறேன்' முதலான படங்களில் பாடியிருந்தாலும் 'தீர்க்கசுமங்கலி' படமே முதலில் வந்ததால், அதில் இடம்பெற்ற இவர் பாடிய பாடலே, முதல்பாடலானது.


    வாணி ஜெயராம்

    வாணி ஜெயராம்

     

    தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் கிட்டத்தட்ட 10,000-க்கும் அதிகமான பாடல்களை இவர் பாடியுள்ளார். சிறந்த பாடகிக்கான தேசிய விருதையும் பல்வேறு மாநில அரசுகள் விருதுகளையும் பெற்றுள்ள வாணி ஜெயராமுக்கு சமீபத்தில் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

     

    வாணி ஜெயராம்

    வாணி ஜெயராம்


    வாணி ஜெயராம் நேற்று சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டின் படுக்கையறையில் இருந்து நிலை தடுமாறி கீழே தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பாடகி வாணி ஜெயராம் உடல் ஓமந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவரது உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்பட உள்ளது.


    வாணி ஜெயராம்

    வாணி ஜெயராம்

     

    இந்நிலையில், மேசை மீது விழுந்து தலையில் பலத்த அடி-காயம் தான் பிரபல பாடகி வாணி ஜெயராம் இறப்பிற்கு காரணம் என பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளனர். படுக்கைக்கு அருகில் இருந்த 2 அடி உயர மேசை மீது அவர் விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், நெற்றியிலும், மேசையில் விளிம்பிலும் ரத்தக்கறைகள் இருந்தது என்று தடவியல் நிபுணர் சோதனையில் உறுதிசெய்யப்பட்டு உள்ளது. மேலும், சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்ததில், அவரது வீட்டிற்கு சந்தேகப்படும்படி யாரும் சென்றதற்கான அடையாளங்கள் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.

    • வேலூரைச் சேர்ந்த இசை குடும்பத்தில் பிறந்தவர் வாணி ஜெயராம்.
    • வாணி ஜெயராமின் மரணம் குறித்து போலீசார் விசாரணை.

    பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    வேலூரைச் சேர்ந்த இசை குடும்பத்தில் பிறந்த வாணி ஜெயராம் 1974 -ஆம் ஆண்டு ஆண்டு வெளியான 'தீர்க்க சுமங்கலி' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார். 'வீட்டுக்குவந்த மருமகள்', 'சொல்லத்தான் நினைக்கிறேன்' முதலான படங்களில் பாடியிருந்தாலும் 'தீர்க்கசுமங்கலி' படமே முதலில் வந்ததால், அதில் இடம்பெற்ற இவர் பாடிய பாடலே, முதல்பாடலானது.


    வாணி ஜெயராம்

    தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் கிட்டத்தட்ட 10,000-க்கும் அதிகமான பாடல்களை இவர் பாடியுள்ளார். சிறந்த பாடகிக்கான தேசிய விருதையும் பல்வேறு மாநில அரசுகள் விருதுகளையும் பெற்றுள்ள வாணி ஜெயராமுக்கு சமீபத்தில் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து, வாணி ஜெயராம் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டின் படுக்கையறையில் இருந்து நிலை தடுமாறி கீழே தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பாடகி வாணி ஜெயராம் உடல் ஓமந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


    வாணி ஜெயராம்

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக திருவல்லிக்கேணி துணை ஆணையர் தேஷ்முக் சேகர் சம்பவ இடத்தில் கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கு மேலாக ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதன் பின்னர் இந்த வழக்கு சந்தேக மரணம் 174 என்ற பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வேலூரைச் சேர்ந்த இசை குடும்பத்தில் பிறந்தவர் வாணி ஜெயராம்.
    • வாணி ஜெயராமின் மரணம் குறித்து போலீசார் விசாரணை.

    பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    வேலூரைச் சேர்ந்த இசை குடும்பத்தில் பிறந்த இவர் 1974 -ஆம் ஆண்டு ஆண்டு வெளியான 'தீர்க்க சுமங்கலி' என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் கிட்டத்தட்ட 10,000-க்கும் அதிகமான பாடல்களை இவர் பாடியுள்ளார்.


    வாணி ஜெயராம்

    சிறந்த பாடகிக்கான தேசிய விருதையும் பல்வேறு மாநில அரசுகள் விருதுகளையும் பெற்றுள்ள வாணி ஜெயராமுக்கு சமீபத்தில் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், வாணி ஜெயராம் சென்னையில் உள்ள தனது வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது மறைவால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    ×