லோகேஷ் கனகராஜூக்கு NO சொன்ன சூப்பர் ஸ்டார்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
லோகேஷ் கனகராஜூக்கு NO சொன்ன சூப்பர் ஸ்டார்
Published on

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி கடந்த ஆகஸ்டு மாதம் வெளியான படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

உலகம் முழுவதும் கூலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. திரைப்படம் வெளியாகி 4 நாட்களில் 404 கோடி ரூபாய் வசூலித்தது.

இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தநிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அப்படத்தை கமலின் RKFL இண்டெர்னேஷ்னல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், இரு வயதான கேங்ஸ்டர் கதாப்பாத்திரங்களை அடிப்படையாக கொண்டதாகும். படத்தின் கதை இருவருக்கும் பிடித்துள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆனால், ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்க இருக்கும் படத்தை இயக்குவது லோகேஷ் கனகராஜ் அல்ல.. நெல்சன் என புதிய தகவல் கிடைத்துள்ளது.

லோகேஷ் கனகராஜின் கதை வன்முறை நிறைந்து இருப்பதால் ரஜினிகாந்த் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றும், நெல்சன் கூறிய கதைக்கு அவர் கிரீன் சிங்னல் காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜெயிலர்2 படத்திற்குப் பிறகு, நெல்சன் படப்பிற்கு முந்தைய பணிகளை தொடங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ரஜினிகாந்த் சுந்தர்.சி இயக்கும் படத்திலும், கமல்ஹாசன் அன்பறிவ் படத்திலும் நடிக்கவுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com