என் மலர்

  நீங்கள் தேடியது "Aarav"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிக்பாஸ் சீசன் ஒன் நிகழ்ச்சியில் வெற்றியாளராக தேர்வான ஆரவ் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.
  கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்த ஆரவ், சரண் இயக்கிய ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தின் மூலம் ஹீரோவானார்.  

  ஆரவ்வும், நடிகை ராஹியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து பெற்றோர்கள் சம்மதத்துடன் அவர்களது திருமணம் கடந்த ஆண்டு செப்டம்பர் 6-ந் தேதி நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

  ஆரவ்

  திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில், தற்போது இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து ஆரவ்வுக்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் வலையில் சிக்கி பின்னர் சகஜமான ஓவியா, ஆரவ் இருவரும் மீண்டும் ஜோடியாக ஊர்சுற்றி வரும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #Oviyaa #Arav
  தமிழில் ‘களவானி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் சக போட்டியாளர் ஆரவ் மீது ஓவியாவுக்கு காதல் ஏற்பட்டது. ஆரவ், ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.

  இருவரும் பிக்பாஸ் அரங்கில் முத்தமிட்டு காதலை வெளிப்படுத்தினர். ஓவியாவை காதலிக்கவில்லை என்று ஆரவ் கூறியதால், அவரை மனதார விரும்பிய ஓவியா மன அழுத்தம் ஏற்பட்டு வெளியேறியதாக கூறப்பட்டது. இதை பின்னர் மறைமுகமாகவும் ஓவியா தெரிவித்தார். பின்னர் ஓவியா சகஜமானார்.

  பழைய சம்பவத்தை மறந்து ஓவியாவும், ஆரவும் தற்போது சகஜமாக பழகி வருகிறார்கள், பேசிக் கொள்கிறார்கள். பொது இடங்களிலும் ஒன்றாக கலந்து கொள்ளும் புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன.   ஆனால் தற்போது ஓவியாவும், ஆரவ்வும் மீண்டும் நெருக்கமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் ஆரவ் பிறந்த நாள் நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இப்போது மீண்டும் கடற்கரையில் ஜோடியாக நின்று செல்பி எடுத்து வெளியிட்டு இருக்கிறார்கள். இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. #Oviyaa #Arav

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஆரவ் இன்று அவரது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், ஆரவ் பிறந்தநாள் பார்ட்டியில் நடிகை ஓவியாவும் கலந்து கொண்டுள்ளார். #HBDAarav #Oviyaa #BiggbossTamil
  பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்று பிரபலமானவர் ஆரவ். அதில் பரிசு தொகையையும் வென்றார். இந்த நிகழ்ச்சியின் போது, பிக்பாஸ் வீட்டில் இருந்த ஓவியாவுக்கும், ஆரவுக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. ஆனால் ஆரவ் அதை மறுத்தார். இதையடுத்து, ஓவியா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

  ஓவியாவை காதலிக்கவில்லை என்று ஆரவ் கூறியதால், அவரை மனதார விரும்பிய ஓவியா மன அழுத்தம் ஏற்பட்டு வெளியேறியதாக கூறப்பட்டது. இதை பின்னர் மறைமுகமாகவும் ஓவியா தெரிவித்தார். பின்னர் ஓவியா சகஜமானார்.

  பழைய சம்பவத்தை மறந்து ஓவியாவும், ஆரவும் தற்போது சகஜமாக பழகி வருகிறார்கள், பேசிக் கொள்கிறார்கள். பொது இடங்களிலும் ஒன்றாக கலந்து கொள்ளும் புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன.   இந்த நிலையில் ஆரவ் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். ஆரவ் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஓவியா மற்றும் ஆரவ்வின் நண்பர்கள் கலந்து கொண்டனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. #HBDAarav #Oviyaa #BiggbossTamil

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆரவ் நடிகை ஓவியா இருவரும் பாங்காக் வீதிகளில் ஜோடியாக சுற்றி வரும் போட்டோ ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. #Aarav #Oviya
  ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்கே சென்றவர், நடிகை ஓவியா. தனது இயல்பான நடவடிக்கைகளால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று, ‘ஓவியா ஆர்மி’ என்று தொடங்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றுள்ளார்.

  ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின்போதே, ஆரவ்வை ஓவியா காதலித்தார். இதற்கு ஆரவ் மறுப்பு தெரிவிக்கவே தற்கொலை முடிவுக்கும் சென்றார். அதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றி பெற்றார்.

  ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி முடிந்தநிலையில் ஆரவ்-ஓவியா அவ்வப்போது சந்தித்துக்கொண்டனர். இதுகுறித்து கிசுகிசுக்களும் வெளியானது. இந்தநிலையில், ஆரவ்-ஓவியா இருவரும் தாய்லாந்து தலைநகர் பாங்காக் வீதிகளில் ஜோடியாக சுற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுகுறித்த புகைப்படங்களும் இணையதளத்தை கலக்குகின்றன. இது, திரையுலகில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.  இதையடுத்து அவரது ரசிகர்கள் ஓவியாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்து உள்ளனர். “விரைவில் நல்ல செய்தி சொல்லுங்கள்,” என்று அன்புடன் வேண்டுகோளும் விடுத்துள்ளனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி - நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் `டிக் டிக் டிக்' படத்தின் விமர்சனம். #TikTikTikReview #JayamRavi #NivethaPethuraj
  பூமியை நோக்கி ஒரு எரிக்கல் ஒன்று விழுகிறது. இதனால், பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை விட சக்தி வாய்ந்த எரிக்கல் ஒன்று விரைவில் பூமியை நோக்கி விழ இருக்கிறது. இது விழுந்தால் மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது.

  இதனால் அதை தடுக்க ராணுவ தளபதி ஜெயப்பிரகாஷ், தன் உதவியாளர்களான நிவேதா பெத்துராஜ், வின்செண்ட் அசோகன் ஆகியோருடன் முயற்சிக்கிறார். அந்த விண்கல்லை அழிக்க தேவையான சாதனங்கள் இங்கு இல்லாததால், விண்வெளியில் இருக்கும் வேறு நாட்டுக்குச் சொந்தமான விண்கலத்தை வைத்து அழிக்க நினைக்கிறார்கள்.

  விண்கலத்தை கேட்டால் தரமாட்டார்கள் என்பதால், அந்த விண்கலத்தை திருடி நமக்கு சாதகமாக மாற்ற நினைக்கிறார்கள். அதற்காக திறமையான ஆளை தேடும் போது, மேஜிக் மேனாக இருக்கும் ஜெயம் ரவியை தேர்வு செய்கிறார்கள்.  சிறிய தவறுக்காக மகனை விட்டு பிரிந்து சிறையில் வாழும் ஜெயம் ரவியிடம், எரிகல்லை அழிக்க உதவினால், அவரது தண்டனையை ரத்து செய்து, மகனுடன் சேர்த்து வைப்பதாக உறுதி அளிக்கின்றனர். மகன் மீதான பாசத்தால் ஜெயம் ரவிக்கு இந்த திட்டத்துக்கு ஒத்துக் கொள்கிறார். மேலும் இந்த திட்டத்தில் தனது நண்பர்களும் தனக்கு துணையாக இருந்தால்தான் எதையும் வெற்றியுடன் செய்ய முடியும் என்று கூறி ரமேஷ் திலக், அர்ஜுனன் ஆகியோரை அழைத்துக் கொண்டு ஜெயம் ரவி தனது குழுவுடன் விண்வெளிக்குச் செல்கிறார்கள்.

  இந்த நிலையில், அவர்களது ராணுவ தளத்தில் இருந்து ஜெயம் ரவிக்கு ஒரு போன் வருகிறது. அதில் ஜெயம் ரவியின் மகனை கடத்தி வைத்திருப்பதாகவும், அவர்கள் செய்யும் திட்டத்தை சதி மூலம் முறியடிக்கச் செய்ய வேண்டும் என்றும் போன் செய்பவர் மிரட்டுகிறார். தன் மகனுக்காக எதையும் செய்யும் ஜெயம் ரவி, எரிக்கல்லை அழிக்க தேவையானதை செய்தாரா? தனது மகனை காப்பாற்றினாரா? கடைசியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.  நாயகன் ஜெயம் ரவி, பாசமிகு அப்பாவாகவும், பொதுநலத்துடன் எரிகல்லை அழிக்க போராடுபவராகவும் வந்து அசத்தியிருக்கிறார். அவருடைய இயல்பான நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது. பல காட்சிகளில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இப்படத்தின் மூலம் இவருடைய மகன் ஆரவ் நடிகராக அறிமுகமாகி இருக்கிறார். புலிக்கு பிறந்தது பூனையாகுமா... குழந்தைத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். பாசக் காட்சிகளில் அப்பா, மகன் என இருவருமே போட்டிபோட்டு நடித்து ரசிக்க வைத்திருக்கிறார்கள். 

  இதுவரை கல்லூரி பெண், கிராமத்து பெண் என நடித்து வந்த நிவேதா பெத்துராஜ் இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் ராணுவ அதிகாரியாக மிரட்டியிருக்கிறார். ஒரு ராணுவ அதிகாரிக்குண்டான மிடுக்குடனும், ஒரு சில இடங்களில் கவர்ச்சியாகவும் வந்து ரசிக்க வைத்திருக்கிறார். 

  வில்லத்தனத்தில் ஆரோன் ஆசிஸ் ஆக்ரோஷமில்லாமல், அமைதியுடன் வந்து மிரட்டுகிறார். மற்றபடி ஜெயப்பிரகாஷ், வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், அர்ஜுனன் என அனைவருமே கொடுத்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.   இந்தியாவின் முதல் விண்வெளி படமாக டிக் டிக் டிக் படத்தை உருவாக்கி இருக்கும் சக்தி சவுந்தர்ராஜனுக்கு பாராட்டுக்கள். விண்வெளி, விண்கலம் என விண்வெளி சம்பந்தப்பட்ட ஒவ்வொரு காட்சியையும் ரசித்து எடுத்திருக்கிறார். ஒரு பக்கம் அப்பா, மகன் பாசம், மற்றொரு பக்கத்தில் எரிகல்லை அழிக்கும் திட்டம் என திரைக்கதையில் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களையும் நல்ல வேலை வாங்கியிருக்கிறார். படத்தில் கலை பணியில் எஸ்.எஸ்.மூர்த்தி மெனக்கிட்டிருக்கிறார் என்பது படத்தை பார்கும் போதே தெரிகிறது. இந்தியாவின் முதல் விண்வெளி படம் என்ற வகையில் விண்வெளி சம்பந்தப்பட்ட காட்சிகளை சிறப்பாக எடுத்திருக்கிறார்கள். 

  டி.இமானின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். பாடல்கள் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. எஸ்.வெங்கடேஷின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

  மொத்தத்தில் `டிக் டிக் டிக்' விறுவிறுப்பு. #TikTikTikReview #JayamRavi #NivethaPethuraj
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி - நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தியாவின் முதல் விண்வெளி படமான `டிக் டிக் டிக்' படத்தின் முன்னோட்டம். #TikTikTik #JayamRavi
  நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் சார்பில் நேமிசந்த் ஜபக், வி.ஹிதேஷ் ஜபக் தயாரித்துள்ள படம் `டிக் டிக் டிக்'. 

  இந்தியாவின் முதல் விண்வெளி படமாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி - நிவேதா பெத்துராஜ் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். சிங்கப்பூரை சேர்ந்த ஆரோன் ஆசிஸ் வில்லனாக நடித்திருக்கிறார். ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன், அர்ஜுனன், ஜெயம் ரவி மகன் ஆரவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

  இசை - டி.இமான், எடிட்டிங் - பிரதீப் இ.ராகவ், பாடல்கள் - மதன் கார்க்கி, தயாரிப்பு - நேமிசந்த் ஜபக், வி.ஹிதேஷ் ஜபக், ஒளிப்பதிவு - எஸ்.வெங்கடேஷ், கதை, திரைக்கதை, எழுத்து, இயக்கம் - சக்தி சவுந்தர் ராஜன்.  படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இமான் பேசும்போது, 

  ‘இது என்னுடைய நூறாவது படம். இதற்காக இறைவனுக்கும், இங்கு கூடியிருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி சொல்கிறேன். இந்த நூறை ஒன்றுக்கு பின்னால் வரும் இரண்டு ஜீரோவாக பார்க்கவில்லை. இரண்டு ஜீரோவிற்கு பிறகு வரும் ஒன்றாகப் பார்க்கிறேன். இதிலிருந்து மீண்டும் இசைப்பயணத்தை தொடங்குகிறேன். தொடர்ந்து ஆயிரம் படங்களுக்கு மேல் பணியாற்ற விரும்புகிறேன். 

  அதே போல் என்னுடைய இசை பயணத்தில் என்னுடைய இணைந்து பணியாற்றிய அனைத்து இசைக்கலைஞர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய நூறாவது படமான இதில் யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலை பாடியிருக்கிறார். அதுபோல், யுவனின் நூறாவது படத்தில் நான் பாடி இருக்கிறேன். இது எதிர்பாராத விதத்தில் அமைந்த விஷயம்’ என்றார்.

  படம் வருகிற ஜூன் 22-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #TikTikTik #JayamRavi

  ×