'குட் பேட் அக்லி' படப்பிடிப்பு இன்று தொடங்கியது

துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து அஜித்குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
'குட் பேட் அக்லி' படப்பிடிப்பு இன்று தொடங்கியது
Published on

துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். நீண்டநாட்களாக கிடப்பில் இருந்த இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதமாக, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்க, ரெஜினா, அர்ஜூன், ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கடந்த மாதம் படத்தில் அஜித் செய்த ஸ்டண்ட் காட்சி ஒன்று வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகியது.

அதைத்தொடர்ந்து அஜித்குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இது அஜித் நடிக்கும் 63-வது திரைப்படமாகும். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இத்திரைப்படத்தை மார்க் ஆண்டனி படத்தின் மூலம் பிரபலம் அடைந்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். தெலுங்கில் பிரபலமாக இருக்கும் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ் நிறுவனம் இத்திரைப்டத்தை தயாரிக்கிறது. இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஐதராபாத்தில் தொடங்கி உள்ளது. இருப்பினும் இந்த படப்பிடிப்பில் அஜித் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com