"குட் பேட் அக்லி" திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு

அஜித்தின் ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.குட் பேட் அக்லி திரைப்படம் 2025-ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும்.
"குட் பேட் அக்லி" திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு
Published on

விடாமுயற்சியை அடுத்து நடிகர் அஜித்தின் ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

இப்படத்திற்கு 'குட் பேட் அக்லி' என பெயரிட்டுள்ளது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர்.

படம் 2025-ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

இந்நிலையில், குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதியை படக்குழுவினர் இன்று அறிவித்துள்ளனர்.

அதன்படி, குட் பேட் அக்லி திரைப்படம் வரும் 10ம் தேதி ஐதராபாத்தில் தொடங்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com