அஜித்துக்கு ஜோடியாகும் தெலுங்கு பிரபலம்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அடுத்த படமான குட் பேட் அக்லி படத்தில் அஜித் நடிக்கவுள்ளார்.படம் 2025-ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது.
அஜித்துக்கு ஜோடியாகும் தெலுங்கு பிரபலம்
Published on

பிரபல நடிகர் அஜித் - திரிஷா நடிக்கும் புதிய படம் விடாமுயற்சி. இதனை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார். இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜூன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். இப்படத்தை லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார்.

அனிரூத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. தொடர்ந்து 3 மாதம் அங்கு ஷூட்டிங் நடந்தது. அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. சில வாரங்களுக்கு முன் வெளியாகிய அஜித் கார் ஓட்டும் ஸ்டண்ட் காட்சி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியது.

இந்நிலையில்  ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அடுத்த படமான குட் பேட் அக்லி படத்தில் அஜித்   நடிக்கவுள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர். படம் 2025-ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது. படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியது.

மகேஷ் பாபு நடித்த குண்டூர் காரம் படத்தின் கதாநாயகியான ஸ்ரீ லீலா 'குட் பேட் அக்லி' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்களிடையே மிகப்பெரிய உற்சாகத்தை உண்டாக்கியுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com