`விடாமுயற்சி' படத்தில் அஜித் மனைவியாக திரிஷா

மிரட்டலான காட்சிகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்த மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
`விடாமுயற்சி' படத்தில் அஜித் மனைவியாக திரிஷா
Published on

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் 'விடாமுயற்சி' என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் கதாநாயகியாக திரிஷா மற்றும் அர்ஜூன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் உள்பட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர் பைஜானில் நடந்து வருகிறது.

முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தாமதமானதால் அஜித் 'குட் பேட் அக்லி' என்ற படத்தில் நடிக்க தொடங்கினார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது. இதையொட்டி விடாமுயற்சி படப்பிடிப்பு பற்றி ரசிகர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.

இந்நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. கடந்த வாரம் அஜர் பைஜானில் தொடங்கிய படத்தின் படப்பிடிப்பில் அஜித் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. தொடர்ந்து கார் சேசிங் காட்சிகள் படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. இந்த காட்சியில் அஜித் ஓட்டி வந்த கார் அந்தரத்தில் பறப்பது போல் மிரட்டலான காட்சிகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

அடுத்த கட்டமாக நேற்று மாலை விடாமுயற்சி படத்தில் அஜித் முதல் தோற்றம் வெளியானது. இதில் அஜர்பைஜான் சாலையில் தனியாக பையுடன் கூலிங்கிளாஸ் அணிந்தபடி நடந்து வரும் காட்சிகள் அஜித் ரசிகர்களுக்கு உற்சாக விருந்தாக அமைந்துள்ளது.

அஜர் பைஜானில் சில நாட்களும், பின்னர் இறுதியாக இந்தியாவில் சில நாட்களும் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். தற்போது அஜர்பைஜானில் ஒரு நாளைக்கு 14 மணி நேரம் முதல் 15 மணி நேரம் வரை படப்பிடிப்பு நடக்கிறது. இந்த மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

படத்தில் திரிஷாவும், அஜித்தும் கணவன்-மனைவியாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இரண்டாம் கட்டப்பிடிப்பில் ஜூலை 5-க்கும் மேல் படக்குழுவினருடன் இணையுள்ளார் திரிஷா. படப்பிடிப்பு பணிகள் ஆகஸ்டு 2-ம் வாரத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com