என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "patriotism"
- 27 அடி நீளமும் 11 அடி அகலத்தில் பிரமாண்டமான தேசிய கொடியை கோலம் வரைந்துள்ளார்.
- தேசியக்கொடி கோலத்தை வரைவதற்கு சுமார் 6 மணி நேரம் தேவைப்பட்டது.
சீர்காழி:
குடியரசு தின விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ரயில்வே ரோடு தெருவை சார்ந்த கயல்விழிவினோதினி என்ற பெண் தனது வீட்டில் 27அடி நீளமும் 11 அடி அகலத்திலும் மிகப்பிரமாண்டமான தேசிய கொடியை கலர் கோல மாவுகளை பயன்படுத்தி வரைந்து உள்ளார்.
இவர் ஒவ்வொரு அரசு சார்பில் நடைபெறும் விழாக்களிலும் அதற்குரிய கோலத்தை இட்டு அசத்தி வருகிறார்.
கடந்த தைப்பொங்கல் திருநாளில் அசல் பட்டுப்புடவை போன்று வண்ண கோலம் இட்டு பார்ப்பவர்கள் அனைவரையும் வியக்க வைத்தார்.
இந்த தேசியக்கொடி கோலத்தை வரைவதற்கு சுமார் 6 மணி நேரம் தேவைப்பட்டது.
இந்த தேசிய கொடியை மிகுந்த தேசப்பற்றுடன் கோல மாவுகளை பயன்படுத்தி வரைந்ததாக கயல்விழி வினோதினி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இந்த கோலத்தை நேற்று அனைவரும் சென்று பார்த்து ரசித்து விட்டு சென்றனர்.
- ஆகஸ்ட் 11 முதல் 17 வரை ஒரு வாரகாலம் கொடியேற்றி நாட்டுப் பற்றை பறைசாற்ற வேண்டும்.
- வருவாய் ஈட்டாத பெற்றோரின் குழந்தைகளுக்கு சொந்த பொறுப்பில் தேசியக் கொடி அனுப்பி வைக்கப்படும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம்தாலுகா தலைஞாயிறு பேருராட்சியில் நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை மிகச் சிறப்பாக கொண்டாட மாணவர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் குகன் கடிதம் எழுதி அழைப்பு விடுத்து வருகிறார்.அந்த கடிதத்தில், மத்திய அரசின் முடிவு படி நாடு முழுவதும் 11.8.2022 முதல் 17.8.2022 முடிய ஒரு வார காலம் சுதந்திர வாரமாக கொண்டாடப்பட உள்ளது. அப்போது அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என இந்திய அரசால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நம் தேசியக் கொடி நம் உயிரில், உணர்வில் கலந்த பெருமை என்று குறிப்பிட்டு வீடு தோறும் ஆகஸ்ட் 11 முதல் 17 வரை ஒரு வார காலம் கொடியேற்றி நாட்டுப் பற்றை பறைசாற்றக் வேண்டும். தலைஞாயிறு பேரூராட்சி அலுவலகத்தில் தேசிய கொடி விற்பனை செய்யப் பட உள்ளது. பெற்றோர் மூலம் வாங்கி கொள்ளலாம். பெற்றோர் இல்லாத குழந்தைகள் மற்றும் வருவாய்ஈட்டாத பெற்றோரின் குழந்தை களுக்கு சொந்த பொறுப்பில் தேசியக் கொடி அனுப்பி வைக்கப்படும்.
அனைத்து வீடுகளிலிலும் தேசியக் கொடி என்னும் இலக்கை எட்ட மாணவர்கள் பங்களிப்பால் மட்டுமே இயலும்.
அஞ்சல் துறைக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தவும் தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்கு அஞ்சல் கடிதம் எழுதி வருகிறேன். மாணவர்களுக்கு தேச பற்ற ஊக்குவிக்கும் விதமாக சுமார் 5000 ஆயிரம் கடிதம் எழுதி அனுப்ப உள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பேரூராட்சி செயல் அலுவலரின் செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிகிறது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி, டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதில் அவர் உரையாற்றும் போது மத்திய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அவர் கூறியதாவது:-
மத்தியில் தற்போது ஆளும் பா.ஜனதா அரசு கருத்து வேறுபாடுகளை மதிக்க தயாராக இல்லை. தங்கள் நம்பிக்கையில் உறுதியாக இருக்கும் மக்கள் மீது தாக்குதல் நடைபெறும் போது, இந்த அரசு பாராமுகமாய் இருக்கிறது.
நாட்டு மக்களாகிய நமக்கு இன்று தேசப்பற்று குறித்து புதிய வரையறை கற்பிக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் நாட்டின் பன்முகத்தன்மையை ஏற்காதவர்கள் தேசபக்தர்களாக அழைக்கப்படுகின்றனர்.
நன்கு திட்டமிட்ட சதி மூலம் நாட்டின் ஆன்மா நசுக்கப்படுகிறது. இது கவலைக்குரிய விஷயமாகும். நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் தனக்குரிய கடமையை நிறைவேற்ற பா.ஜனதா அரசு தயாராக இல்லை.
இவ்வாறு சோனியாகாந்தி கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப் பட்டு உள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் எனக் கூறிய சோனியாகாந்தி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன், தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ள திட்டங்கள் அனைத்தும் அமல்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். #SoniaGandhi #Patriotism
பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்குள் புகுந்து இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் அங்கிருந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர்? என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் மத்திய அரசின் சார்பில் வெளியிடப்படவில்லை.
இதுதொடர்பாக மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையில், டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி சமீபத்தில் பேரணி ஒன்றில் ராணுவத்தினர் அணியும் சீருடையுடன் கலந்து கொண்டார். இதை குறிவைத்து எதிர்க்கட்சிகள் மத்தியில் ஆளும் பாஜக மீது குற்றம்சாட்டி வருகின்றன. ராணுவ வீரர்களின் தியாகத்துக்கு பாஜகவினர் உரிமை கொண்டாடி வருவதாக எதிர்ப்புக்குரல் கிளம்பியுள்ளது.
இந்நிலையில், தேசபக்தி என்பது எந்த கட்சியின் ஏகபோக உரிமையும் அல்ல என சிவசேனா கட்சி குறிப்பிட்டுள்ளது. அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாமனா’வில் இவ்விவகாரம் தொடர்பாக இன்று ஒரு தலையங்க கட்டுரை வெளியாகியுள்ளது.
விமானப்படையினர் நடத்திய தாக்குதல் என்பது அவர்களின் பணியின் ஒரு பகுதியாகும். யாரும் இட்ட வேலையை செய்வதற்காக அந்த தாக்குதல் நடத்தப்படவில்லை. இந்த தாக்குதலால் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பான தலைகணக்கு கேட்பவர்களும், தாக்குதலுக்கு உரிமை கோரும் வகையில் ராணுவ சீருடையில் ஊர்வலமாக செல்பவர்களும் சரிசமமாக கண்டிக்கப்பட வேண்டியவர்கள் ஆவார்கள்.
இதுதொடர்பாக கேள்வி எழுப்புபவர்கள் அரசியல் எதிரிகள் என்பதால் அவர்களின் கருத்துரிமையை தேசத்துரோகம் என்று யாரும் கூற முடியாது.
தேர்தல் கமிஷனே நேரடியாக தலையிட்டு இதுபோல் செய்ய கூடாது என எச்சரிக்கும் நிலை இதனால் ஏற்பட்டுள்ளது. தேசபக்தி என்பது எந்த ஒரு அரசியல் கட்சியின் தனிப்பட்ட ஏகபோக உரிமையும் அல்ல என்பதை அவர்கள் உணர வேண்டும்’ என அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #Patriotism #Patriotismmonopoly #ShivSena
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்