என் மலர்
நீங்கள் தேடியது "mysore baku"
- மைசூர் பாக்கை வீட்டில் எப்படி செய்வது என பலருக்கும் தெரியாது.
- சர்க்கரை பாகும், கடலை மாவும் சேர்ந்து நல்ல பதத்திற்கு வந்தவுடன் நெய் சேர்த்தால் மைசூர் பாக் ரெடி!
தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடை வரிசையில் பலகாரத்திற்கும் முக்கிய இடம் உண்டு. தீபாவளி நோம்பு இருப்பவர்கள், அதிரசம், முறுக்கு போன்றவற்றை செய்து சாமிக்கு படைத்து கொண்டாடுவார்கள். நோம்பு இல்லாதவர்கள், பெரும்பாலும் குலாப் ஜாமுன் செய்வார்கள். சிலர் கடைகளில் இனிப்புகளை வாங்கி நண்பர்களுக்கு கொடுப்பார்கள். கடை இனிப்புகளில் முக்கியமானது மைசூர் பாக். அதிலும் வாயில் போட்டவுடன் கரையும் மைசூர் பாக்குக்கு நிறைய பேர் அடிமை என்றே சொல்லலாம். அந்த மைசூர் பாக்கை வீட்டில் எப்படி செய்வது என பலருக்கும் தெரியாது. ஆனால் மைசூர் பாக்கை வீட்டிலேயே ஈசியாக செய்யலாம். வாங்க...

மைசூர் பாக் செய்முறை
* மைசூர் பாக் செய்வதற்கு முதலில் கடலை மாவை நன்கு சலித்துக்கொள்ள வேண்டும்.
* நெய் மற்றும் எண்ணெய்யை ஒன்றாக சேர்த்து லேசாக காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.
* ஒரு பாத்திரத்தில் கடலை மாவை கொட்டி, அதில் காய்ச்சிய நெய் கலவையை பாதி அளவு ஊற்றி, கெட்டி ஆகாமல் மாவை பிசைந்துக்கொள்ள வேண்டும். (மீதி நெய் கலவையை தனியாக வைத்துக்கொள்ளுங்கள்)
* அடுப்பை பற்றவைத்து, கனமான கடாயில் சர்க்கரையை போட்டு அதில் தண்ணீர் ஊற்றி கம்பி பதத்திற்கு பாகு எடுக்க வேண்டும். பாகு எடுக்க தெரியாது என்பவர்கள், தண்ணீர் நன்கு கொதித்து வெள்ளை நுரைபோல பொங்கும் பதத்தை, பாகு பதமாக எடுத்துக்கொள்ளலாம்.
* சர்க்கரை பாகில், கடலை மாவு கலவையைக் கொட்டி, கெட்டி இல்லாமல் கலக்கிவிட வேண்டும்.
* ஸ்டவ்வை, மீடியம் அல்லது லோ ஃப்ளேமில் மாறி மாறி வைத்துக்கொள்ளலாம். ஹை ஃப்ளேமில் வைக்கக்கூடாது.
* சர்க்கரை பாகுடன் கடலை மாவு கலவை நன்கு சேர்ந்தவுடன், மீதி உள்ள நெய் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக அதில் சேர்த்து கிளற வேண்டும்.
* கடாயில், மைசூர் பாக் கலவை நன்கு திரண்டு உருண்டு வரும்போது அடுப்பை ஆஃப் செய்துவிடலாம்.
* ட்ரே ஒன்றில் சுடான மைசூர் பாக் கலவையை ஊற்றி, 5 முதல் 6 மணி நேரங்களுக்கு அப்படியே விட்டுவிட வேண்டும்.
* மேலும் ட்ரேவில் ஊற்றிய மைசூர் பாக் கலவையை அதிகமாக அழுத்திவிடக் கூடாது.
* 6 மணி நேரங்களுக்கு பிறகு, கத்தி ஒன்றை எடுத்து, நமக்கு பிடித்த ஷேப்பில் மைசூர் பாக்கை வெட்டிக்கொள்ளலாம்.
* அந்த மைசூர் பாக்கை எடுத்து வாயில் வைத்தால் நிச்சயம் அப்படியே கரைந்து தொண்டைக் குழிக்குள் இறங்கும்.
- இது தேவையற்றது என பல நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
- சில்லறை பாக்கி - சில்லறை ஸ்ரீகி என பெயர் மாற்றலாமே என கலாய்த்து வருகின்றனர்.
இந்தியா பாகிஸ்தான் மோதலை அடுத்து பலர் தங்கள் தேசிய உணர்வை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள இனிப்புக் கடை உரிமையாளர்கள், பாரம்பரிய இந்திய இனிப்புப் பெயர்களில் இருந்து "பாக்" என்ற வார்த்தையை நீக்க முடிவு செய்தனர்.
மோதி பாக், ஆம் பாக், கோண்ட் பாக் மற்றும் மைசூர் பாக் போன்ற இனிப்புகள் மோதி ஸ்ரீ, ஆம் ஸ்ரீ, கோண்ட் ஸ்ரீ மற்றும் மைசூர் ஸ்ரீ என மறுபெயரிடப்பட்டுள்ளன. அதவாது, "பாக்" என்ற சொல் "ஸ்ரீ" என்று மாற்றப்பட்டுள்ளன. ஆனால் இது தேவையற்றது என பல நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பான மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதன்படி பாக் என்று சொல் இருக்கும் மற்ற பிற வார்த்தைகளையும் நெட்டிசன்கள் பெயர் மாற்றி அழைத்து வருகின்றனர்.
உதாரணமாக பாக்டீரியா - ஸ்ரீடீரியா, பாக்யராஜ் - ஸ்ரீக்யராஜ், நிஜாம் பாக்கு - நிஜாம் ஸ்ரீ, சேப்பாக்கம் - சேஸ்ரீ, பாக்குறேன் - ஸ்ரீகுறேன், சில்லறை பாக்கி - சில்லறை ஸ்ரீகி என பெயர் மாற்றலாமே என கலாய்த்து வருகின்றனர்.

கண்மூடித்தனமான தேசபக்தி, தேசத்திற்கோ, சமூகத்திற்கோ எந்த பயனையும் தராது என ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.கண்மூடித்தனமான தேசபக்தி, தேசத்திற்கோ, சமூகத்திற்கோ எந்த பயனையும் தராது என ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
- ஒரு பயனர், "பக்கோடாவை ஸ்ரீ-ஓடா என்று மாற்றுவீர்களா?" என வினவியுள்ளார்.
- "பாக்" என்ற வார்த்தை கன்னட வார்த்தையான "paaka" என்பதிலிருந்து வந்தது.
பஹல்காம் தாக்குதல், பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் ஆகியவை நாட்டு மக்களிடம் தேசிய உணர்வை கிளர்த்தியுள்ளது. இதன் விளைவாக பாகிஸ்தான் மீதான மக்களின் கோபம் பல்வேறு வகையில் வெளிப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள இனிப்புக் கடை உரிமையாளர்கள், பாரம்பரிய இந்திய இனிப்புப் பெயர்களில் இருந்து "பாக்" என்ற வார்த்தையை நீக்க முடிவு செய்துள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, மோதி பாக், ஆம் பாக், கோண்ட் பாக் மற்றும் மைசூர் பாக் போன்ற இனிப்புகள் மோதி ஸ்ரீ, ஆம் ஸ்ரீ, கோண்ட் ஸ்ரீ மற்றும் மைசூர் ஸ்ரீ என மறுபெயரிடப்பட்டுள்ளன. அதவாது, "பாக்" என்ற பின்னொட்டு "ஸ்ரீ" என்று மாற்றப்பட்டுள்ளன. ஆனால் இது தேவையற்றது என பல நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஒரு பயனர், "பக்கோடாவை ஸ்ரீ-ஓடா என்று மாற்றுவீர்களா?" என வினவியுள்ளார். மற்றொரு பயனர், "பாக்" என்ற வார்த்தை கன்னட வார்த்தையான "paaka" என்பதிலிருந்து வந்தது என்று தெரிவித்தார்.
இதன் பொருள் "இனிப்பு சுவையூட்டி ". இது இந்தி வார்த்தையான "paag" மற்றும் சமஸ்கிருத வார்த்தையான "pagva" ஆகியவற்றுடன் வேர்களைப் பகிர்ந்து கொள்கிறது என்று அந்த பயனர் தெரிவித்தார்.
- அரிசி மாவு, பச்சை மிளகாய் விழுது கலந்து கிளறினால் வடகம் சுலபமாக பிழியலாம்.
- வெண்ணெய், பால் கலந்து அரிசி மாவை கிளறினால் கொழுக்கட்டை உடைந்து வராது.
பொதுவாகவே சமைக்கும் அனைவருக்கும் பிடித்த மாதிரி சமைக்க வேண்டும் என்பது தான் இல்லத்தரசிகளின் பெரிய ஆசை. இதற்காக புதிய புதிய வகைகளில் சமையல்களை செய்வார்கள் அப்படி சமையலில் அசத்த சில சூப்பரான டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.
* கடலை மாவை சூடான நெய்யில் கரைத்து, பின்பு சர்க்கரை பாகில் கலந்து மைசூர் பாகு செய்தால், அது மிருதுவாகவும், மென்மையாகவும் இருக்கும். மைசூர் பாகு செய்யும்போது நெய்யும் அதிகம் ஊற்றி கிளற வேண்டியது இருக்காது.
* பாசி பருப்பை வேகவைத்து அதில் அரிசி மாவு கலந்து தேன் குழல் செய்தால் சுவையாக இருக்கும்.
* காய்கறிகள் வேக வைத்த தண்ணீரை வடிகட்டிக்கொள்ளவும். அதனை பயன்படுத்தி அவியல் செய்தால் காய்கறிகள் கறுப்பு நிறமாக மாறாது. பொரியலும் பளிச்சென்றும், ருசியாகவும் இருக்கும். (தண்ணீர் கொஞ்சமாக ஊற்றி வேக வைக்கவும்)
* கேசரிக்கு நெய் ஊற்றி ரவையை வறுக்கும்போது அதில் சிறிதளவு சுடுதண்ணீர் ஊற்றவும். அதனுடன் கேசரி பொடியை சேர்த்தால் துளி கூட கட்டி பிடிக்காது.
* ஜவ்வரிசியை வேகவைத்து அந்த தண்ணீரில் உப்பு, அரிசி மாவு, பச்சை மிளகாய் விழுது கலந்து கிளறினால் வடாகம் சுலபமாக பிழியலாம்.
* அடைக்கு தேவையான பருப்பு, மிளகாயை மிக்சியில் அரைத்து வைத்துக்கொண்டால் உடனடியாக உப்பு கலந்து அடை செய்யலாம்.
* கொழுக்கட்டைக்கு தண்ணீர் கொதிக்கும்போது, ஒரு ஸ்பூன் வெண்ணெய், ஒரு ஸ்பூன் பால் கலந்து பின்பு அரிசி மாவை போட்டு கிளறினால் கொழுக்கட்டை உடைந்து வராமல் இருக்கும்.






