என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sweet Shop"

    • மைசூர் பாக்கை வீட்டில் எப்படி செய்வது என பலருக்கும் தெரியாது.
    • சர்க்கரை பாகும், கடலை மாவும் சேர்ந்து நல்ல பதத்திற்கு வந்தவுடன் நெய் சேர்த்தால் மைசூர் பாக் ரெடி!

    தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடை வரிசையில் பலகாரத்திற்கும் முக்கிய இடம் உண்டு. தீபாவளி நோம்பு இருப்பவர்கள், அதிரசம், முறுக்கு போன்றவற்றை செய்து சாமிக்கு படைத்து கொண்டாடுவார்கள். நோம்பு இல்லாதவர்கள், பெரும்பாலும் குலாப் ஜாமுன் செய்வார்கள். சிலர் கடைகளில் இனிப்புகளை வாங்கி நண்பர்களுக்கு கொடுப்பார்கள். கடை இனிப்புகளில் முக்கியமானது மைசூர் பாக். அதிலும் வாயில் போட்டவுடன் கரையும் மைசூர் பாக்குக்கு நிறைய பேர் அடிமை என்றே சொல்லலாம். அந்த மைசூர் பாக்கை வீட்டில் எப்படி செய்வது என பலருக்கும் தெரியாது. ஆனால் மைசூர் பாக்கை வீட்டிலேயே ஈசியாக செய்யலாம். வாங்க... 


    மைசூர் பாக் செய்முறை

    * மைசூர் பாக் செய்வதற்கு முதலில் கடலை மாவை நன்கு சலித்துக்கொள்ள வேண்டும்.

    * நெய் மற்றும் எண்ணெய்யை ஒன்றாக சேர்த்து லேசாக காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும். 

    * ஒரு பாத்திரத்தில் கடலை மாவை கொட்டி, அதில் காய்ச்சிய நெய் கலவையை பாதி அளவு ஊற்றி, கெட்டி ஆகாமல் மாவை பிசைந்துக்கொள்ள வேண்டும். (மீதி நெய் கலவையை தனியாக வைத்துக்கொள்ளுங்கள்) 

    * அடுப்பை பற்றவைத்து, கனமான கடாயில் சர்க்கரையை போட்டு அதில் தண்ணீர் ஊற்றி கம்பி பதத்திற்கு பாகு எடுக்க வேண்டும். பாகு எடுக்க தெரியாது என்பவர்கள், தண்ணீர் நன்கு கொதித்து வெள்ளை நுரைபோல பொங்கும் பதத்தை, பாகு பதமாக எடுத்துக்கொள்ளலாம்.

    * சர்க்கரை பாகில், கடலை மாவு கலவையைக் கொட்டி, கெட்டி இல்லாமல் கலக்கிவிட வேண்டும். 

    * ஸ்டவ்வை, மீடியம் அல்லது லோ ஃப்ளேமில் மாறி மாறி வைத்துக்கொள்ளலாம். ஹை ஃப்ளேமில் வைக்கக்கூடாது. 

    * சர்க்கரை பாகுடன் கடலை மாவு கலவை நன்கு சேர்ந்தவுடன், மீதி உள்ள நெய் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக அதில் சேர்த்து கிளற வேண்டும். 

    * கடாயில், மைசூர் பாக் கலவை நன்கு திரண்டு உருண்டு வரும்போது அடுப்பை ஆஃப் செய்துவிடலாம். 

    * ட்ரே ஒன்றில் சுடான மைசூர் பாக் கலவையை ஊற்றி, 5 முதல் 6 மணி நேரங்களுக்கு அப்படியே விட்டுவிட வேண்டும்.  

    * மேலும் ட்ரேவில் ஊற்றிய மைசூர் பாக் கலவையை அதிகமாக அழுத்திவிடக் கூடாது. 

    * 6 மணி நேரங்களுக்கு பிறகு, கத்தி ஒன்றை எடுத்து, நமக்கு பிடித்த ஷேப்பில் மைசூர் பாக்கை வெட்டிக்கொள்ளலாம். 

    * அந்த மைசூர் பாக்கை எடுத்து வாயில் வைத்தால் நிச்சயம் அப்படியே கரைந்து தொண்டைக் குழிக்குள் இறங்கும். 

    • மனு மீதான விசாரணை இன்று நுகர்வோர் நீதிமன்றத்திற்கு வந்தது.
    • எனக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    சென்னை புரசைவாக்கத்தில் பிரபல இனிப்பகம் உள்ளது. இந்த இனிப்பகத்தில் ரவிசங்கர் என்பவர் இனிப்பு வாங்கும்போது கிலோவுக்கு ரூ.25 கூடுதலா வசூலித்ததாக குற்றம்சாட்டினார்.

    இதனால், இனிப்பகத்திற்கு எதிராக ரவிசங்கர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    அந்த புகார் மனுவில்,"தான் கால் கிலோ பாதாம் பிஸ்தா ரோல் வாங்கயதாகவும், இதற்கு ரூ.425 பணம் பெறுவதற்கு பதிலாக ரூ.450 வசூலித்தனர்" என்றும் குற்றச்சாட்டினார்.

    மேலும், "இனிப்புக்கு கூடுதலாக ரூ. 25 வசூலித்ததில் மன உளைச்சலுக்கு ஆளானேன். அதனால் எனக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று நுகர்வோர் நீதிமன்றத்திற்கு வந்தது.

    அப்போது," மன உளைச்சலுக்கு ஆளான வாடிக்கையாளருக்கு ஒரு கிலோ இனிப்பை வீட்டுக்கு அனுப்பி வைக்கும்படி இனிப்பகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், கூடுதலாக வசூலிக்கப்பட்ட பணம், திருப்பி அளிக்கப்பட்டபோதும், இனிப்பகத்தின் செயல்பாடு, சேவை குறைபாட்டை காட்டுகிறது" என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இமாச்சலபிரதேசத்தில் உள்ள இனிப்பு கடைக்குள் கரடி ஒன்று நுழைந்துள்ளது.
    • இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    ஹிமாச்சலப் பிரதேச மாநிலம், சம்பா மாவட்டத்தில் உள்ள ஜோட் என்ற இடத்தில் உள்ள இனிப்புக் கடைக்குள் நுழைந்த கரடி அங்குள்ள பர்பி வகை இனிப்பு வகைகளை சுவைத்து சாப்பிட்டுள்ளது.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

    இதே போன்றதொரு நிகழ்வு அமெரிக்காவில் கடந்த ஜூன் மாதம் நடந்தது. டென்னசி மாகாணத்தில் உள்ள அனகீஸ்டா மவுண்டன்டாப் அட்வென்ச்சர் பூங்காவில் நுழைந்த கரடி, அங்குள்ள உணவை சாப்பிடும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

    • ஆயுத பூஜையின்போது இனிப்புகளின் தேவை அதிகரிக்கும்.
    • இனிப்பு விற்பனை கடைகள், பேக்கரிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

    இந்துக்களின் முக்கியமான விழாவான நவராத்திரி, ஆயுத பூஜை, விஜயதசமி அடுத்த மாதம் வர இருக்கிறது. அதைத்தொடர்ந்து தீபாவளி பண்டிகையும் வருகிறது. இந்தியா முழுவதும் உள்ள இந்துக்களால் பரவலாகக் கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளியாகும். இந்த விசேஷ நாட்களில் இனிப்புகளுக்கு முக்கிய இடம் உண்டு.

    ஆயுத பூஜை விழாவின்போது இனிப்புகளின் தேவை அதிகரிக்கும்.

    இந்நிலையில் பண்டிகை காலங்களில் இனிப்புகளின் தரம் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என மத்திய உணவு தரக்கட்டுப்பாட்டு ஆணையம் மாநிலங்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. அதில்,

    * இனிப்பு விற்பனை கடை, பேக்கரிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு நடத்த வேண்டும்.

    * தேவை அதிகரிப்பதால் இனிப்புகளின் தரத்தை குறைக்க வாய்ப்புள்ளது.

    * இனிப்பு விற்பனை கடைகள், பேக்கரிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    ×