search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இனிப்புகள்"

    • மும்பை விமான நிலையத்தில் மேள தாளங்களுடன் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன.
    • இந்தியா கேட்டின் முன் திரண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் ஒருவருக்கொருவர் வெற்றிகளிப்பை பரிமாறிக்கொண்டனர்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தியா பெற்றுள்ள இந்த வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது.

    நள்ளிரவில் பிரதான நகரங்களில் தெருக்களை ஆக்கிரமித்த ரசிகர்கள் இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் இந்தியாவின் வெற்றியை கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். மும்பை விமான நிலையத்தில் மேள தாளங்களுடன் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. நிலையத்தில் உள்ளவர்களுக்கு இனிப்புகள் பரிமாறப்பட்டன.

    இந்தியா கேட்டின் முன் திரண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் ஒருவருக்கொருவர் வெற்றிகளிப்பை பரிமாறிக்கொண்டனர். குறிப்பாக மத்திய பிரதேச மாநில பாஜக அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா தெருவில் இறங்கி தேசியக்கொடியை அசைத்து ரசிகர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். மேலும் உத்தரப் பிரதேசம் கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலத் தலைநகரங்களிலும் கொண்டாட்டங்கள் கலைக்கட்டியுள்ளன. 

    • ஆசிரியர்கள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர்.
    • பாடப்பு த்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூா்:

    தமிழகத்தில் பள்ளி களுக்கு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது . பின்னர் வெயிலின் தாக்கத்தால் 10-ம் தேதி ( இன்று) பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது .

    அதன்படி கோடை விடுமுறை முடிந்து 2 மாதங்களுக்குப் பிறகு இன்று (திங்கட்கிழமை) அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. மயிலாடுதுறை தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி இன்று திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் உற்சாகத்துடன் வந்தனர்.

    அப்போது பள்ளி மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர். மேலும் பள்ளி மாணவர்களுக்கு முதல் நாள் சந்தோச இனிப்புடன் தொடங்கும் வகையில் அவர்களுக்கு சர்க்கரை பொங்கல், கல்கண்டு போன்றவை வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மாணவர்கள் இன்முகத்தோடு சிரிப்புடன் அதை வாங்கி கொண்டு பள்ளிக்கு உள்ளே சென்றனர்.

    மேலும் 2 மாதங்களுக்கு பிறகு நண்பர்களை சந்தித்ததால் பழைய நிகழ்வுகளை மனம் விட்டு பேசினர்.

    தொடர்ந்து 2024-25-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளி வகுப்புகள் தொடங்கி நடைபெற்றது. முதல் நாளிலே மாணவ-மாணவிகளுக்கு தேவையான பாடப்பு த்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டன. அவற்றை ஆர்வத்துடன் மாணவர்கள் வாங்கி படித்தனர். தொடர்ந்து இந்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் நடந்து வருகிறது.

    • நாகையில் உள்ள புதேவாலயம், கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சுவிட் வழங்கி கொண்டாடினார்.
    • மீலாதுநபி பெறுவிழாவாக இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மீலாதுநபி பெறுவிழாவாக இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    அதன்படி நாகூர் நாயகன் நேசபாசறை என்ற அமைப்பை சேர்ந்த ஹாஜா சம்சுதீன் சாகிப் என்ற இஸ்லாமியர் மீலாது நபியை மத நல்லிணக்க விழாவாக கொண்டாடும் வகையில் நாகப்பட்டினம் கடற்கரை சாலையில் உள்ள புனித லூர்து அன்னை தேவாலயம், புகழ்பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் ஆலயம், பாப்பாகோவில் ஹாஜா சேக் அலாவுதீன் வலியுல்லா தர்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று அங்கு வரும் பக்தர்களுக்கு சுவிட் கேக் வழங்கி கொண்டாடினார்.

    மீலாது நபி பெருவிழாவில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி இஸ்லாமியர் ஒருவர் கேக் வழங்கி கொண்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்பட்டுள்ளது.

    • வைத்தீஸ்வரன் கோவிலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • விழாவில் பொது மக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது

    சீர்காழி:

    தமிழக முதல்வர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த நாள் விழா மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம். முருகன் அறிவுறுத்தலின்படி மாவட்ட அறங்காவலர் குழு தலைவரும், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினருமான சுவாமிநாதன் ஏற்பாட்டில் 500 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி கொண்டாடப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொருளாளர் மகா.அலெக்சாண்டர், பேரூராட்சி செயலாளர் அன்புச்செழியன், பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர், அவை தலைவர் சந்திரமூர்த்தி, பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்த், துணை செயலாளர் இராமலிங்கம், மாவட்ட பிரதிநிதி கமலநாதன், பேரூர் கழகப் பொருளாளர் ராஜசேகர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வைத்தீஸ்வரன் கோவில் கடைவீதியில் திமுக பேரூராட்சி கழகம் சார்பில் திமுகவின் கொடியை ஏற்றி பொது மக்களுக்கு தென்னங்கன்று மற்றும் இனிப்புகள் வழங்கி தமிழக முதல்வரின் 70 வது பிறந்தநாளை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    • தஞ்சை ரெயில் நிலையம் தொடங்கி 161 ஆண்டுகள் முடிவடைந்து 162-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
    • ரெயிலில் வந்த அனைத்து பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் மிகப் பழமையான ரெயில் நிலையங்களில் தஞ்சை ரெயில் நிலையமும் ஒன்றாகும். தஞ்சை ரெயில் நிலையம் கடந்த 2-12-1861-ம் ஆண்டு தொடங்கப்பட்டு ரெயில் சேவை வழங்கி வருகிறது.

    இன்றுடன் தஞ்சை ரெயில் நிலையம் தொடங்கி 161 ஆண்டுகள் முடிவடைந்து 162-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

    இதனை கொண்டாடும் வகையில் இன்று தஞ்சை மாவட்ட ரெயில்வே உபயோகிப்பார்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் நடராஜன், செயலாளர் வக்கீல் ஜீவக்குமார் ஆகியோர் தலைமையில் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து ரெயில்வே சீப் கமர்சியல் இன்ஸ்பெக்டர் மோகன், ரயில்வே நிலைய அதிகாரி சம்பத்குமார் ஆகியோருக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

    இதையடுத்து ரெயிலில் வந்த அனைத்து பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் சங்க பொருளாளர் கண்ணன், வழக்கறிஞர்கள் உமர் முக்தர், முகமது பைசல், பேராசிரியர்கள் திருமேனி, செல்ல கணேசன், பாபநாசம் ரெயில்வே உபயோகிப்பாளர் சங்க செயலாளர் சரவணன், நிர்வாகிகள் சோமநாதராவ், சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 1500 கிலோ அரிசி மற்றும் 1000 கிலோ காய்கறிகள், இனிப்பு வகைகள் ஆகியவற்றை பக்தர்கள் தானமாக வழங்கினர்.
    • தயார் செய்யப்பட்ட சாதம் பெருவுடையார் திருமேனிகளில் சாத்தப்படுகிறது

    தஞ்சாவூர்:

    உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்குவதோடு, தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது.

    இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    பெரியகோவிலில் கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப்பெரிய லிங்கத் திருமேனியாகும்.

    6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட பீடமும், அதன்மேல் 13 அடி உயரம், 23 அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டு உள்ளது.

    இத்தகைய சிறப்பு மிக்க பெருவுடையாருக்கு ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இன்று ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து, பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டு, காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது.

    இதற்காக பக்தர்கள் இன்று காலையிலிருந்து அரிசி, காய்கறிகளை தானமாக செய்து வருகின்றனர்.

    சுமார் 1500 கிலோ அரிசி, சுமார் 1000 கிலோ முள்ளங்கி, கேரட், கத்தரிக்காய் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகள், இனிப்பு வகைகள் ஆகியவற்றை பக்தர்கள் தானமாக வழங்கினர்.

    இதனைத் தொடர்ந்து அரிசியை சாதமாக தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.

    மேலும் காய்கறிகள் கொண்டு அலங்காரம் செய்யும் பணியும் நடைபெற உள்ளது.

    பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு

    இன்று மாலை 4.30 மணி அளவில் அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.

    தயார் செய்யப்பட்ட சாதம் பெருவுடையார் திருமேனிகளில் சாத்தப்படுகிறது.

    காய்கறிகள் கொண்டு பெருவுடையாருக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்படுகிறது.

    இந்த அன்னாபிஷேகம் மூலம் உலக மக்கள் நலன் பெற வேண்டியும், நீர்நிலைகள் நிரம்பவும், விவசாயம் செழிக்கவும் நடத்தப்படுகிறது.

    அன்னாபிஷேகம் முடிந்ததும் அலங்காரம் கலைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    மேலும் நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகள் உணவருந்தும் வகையில் அன்னம் ஆற்றில் கரைக்கப்படும்.

    இந்த அன்னாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    • எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிப்பதற்காக அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக புறப்பட்டனர்.
    • பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் பொன்விழா நிறைவு விழாவை முன்னிட்டு இன்று தஞ்சை ரயில் நிலையம் முன்பு உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிப்பதற்காக அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக புறப்பட்டு வந்தடைந்தனர்.

    பின்னர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை. திருஞானம் தலைமையில் அம்மா பேரவை இணை செயலாளர் காந்தி முன்னிலையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    அப்போது பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்க ப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் நிக்கல்சன் வங்கி தலைவர் சரவணன், மாவட்ட அச்சக தலைவர் புண்ணியமூர்த்தி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ராஜமாணிக்கம், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் நாகராஜன், முன்னாள் மேயர் சாவித்ரி கோபால், முன்னாள் கவுன்சிலர் பூபதி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தம்பி என்ற சோமரத்தினசுந்தரம், அம்மா பேரவை துணை செயலாளர் பாலை ரவி , மாணவர் அணி முருகேசன், கவுன்சிலர்கள் கோபால், தட்சிணாமூர்த்தி, கேசவன், காந்திமதி , மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஜாபர் , முன்னாள் நகர செயலாளர் முருகேசன், 51-வது வட்டச் செயலாளர் மனோகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • உளுந்தூர்பேட்டை பகுதியில் பா.ம.க. கொடி ஏற்று விழா நடைபெற்றது.
    • தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் அந்த நிர்வாகிகளுடன் கலந்து கொடியேற்று விழா நடந்தது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்க முழுவதும் பா.ம.க. 34-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது/ இதை முன்னிட்டு பாண்டூர் பஸ்நிலையத்தில் மாவட்ட தலைவர் தமிழ்வாணன் தலைமையில் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினர். இதுபோல் தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் அந்த நிர்வாகிகளுடன் கலந்து கொடியேற்று விழா நடந்தது. இதில் முன்னாள் நிர்வாகிகள் பாண்டுர் பாண்டியன், மணிராஜ், ஜெயக்குமார், பாலாஜி, கோவிந்தராஜ், அறிவழகன், பாலகிருஷ்ணன், ராஜேந்திரன், கார்த்திக், தனபால் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    ×