என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீம்ஸ்"

    • ஜாவா சுந்தரேசன் கதாபாத்திரம் பிற்காலத்தில் சமூக வலைத்தளங்களில் மீம் டெம்ப்லேட்டாக மாறியது.
    • இயக்குநர் சிம்புதேவனைச் சந்தித்த நடிகர் சாம்ஸ் தன் பெயரை ஜாவா சுந்தரேசன் என மாற்றிக்கொள்ள ஒப்புதல் கேட்ட விடியோ வெளியாகியுள்ளது.

    சிம்புதேவன் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு திரைப்படம் அறை எண் 305-ல் கடவுள். நடிகர்கள் பிரகாஷ் ராஜ், எம். எஸ்.பாஸ்கர், சந்தானம், சாம்ஸ் உள்ளிட்டோர் நடித்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

    இதில் நகைச்சுவை நடிகர் சாம்ஸ் ஏற்று நடித்த ஜாவா சுந்தரேசன் கதாபாத்திரம் பிற்காலத்தில் சமூக வலைத்தளங்களில் மீம் டெம்ப்லேட்டாக மாறியது.

    படத்தின் தொடக்கத்தில் சிறு போர்ஷனில் வந்திருந்தாலும் ஜாவா படித்து குறுகிய காலத்தில் மிகப்பெரிய மென்பொருள் வல்லுநராக மாறியிருப்பார். 'கலக்குப்பா கலக்கு' என்று சந்தானம் கூறும் டயலாக்கும் பேமஸானது. இதனால் நடிகர் சாம்ஸ் ரசிகர்கள் மனதில் ஜாவா சுந்தரேசன் என்றே பதிந்து விட்டார்.

    இந்த நிலையில், இயக்குநர் சிம்புதேவனைச் சந்தித்த நடிகர் சாம்ஸ் தன் பெயரை ஜாவா சுந்தரேசன் என மாற்றிக்கொள்ள ஒப்புதல் கேட்ட விடியோ வெளியாகியுள்ளது.

    அவரும் அதற்கு ஒப்புதல் கொடுத்து வாழ்த்தியுள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்து வரும் சாம்ஸ் அவர் திரைவாழ்வில் முக்கியமான கதாபாத்திரமாக அமைந்த ஜாவா சுந்தரேசன் என்ற பெயரையே தனக்கு சூட்டிக் கொண்டது கவனம் பெற்றுள்ளது. செல்லும் இடமெல்லாம் தன்னை ஜாவா சுந்தரேசன் என்றே அழைப்பதால் அவர் இந்த முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.   

    • இது தேவையற்றது என பல நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
    • சில்லறை பாக்கி - சில்லறை ஸ்ரீகி என பெயர் மாற்றலாமே என கலாய்த்து வருகின்றனர்.

    இந்தியா பாகிஸ்தான் மோதலை அடுத்து பலர் தங்கள் தேசிய உணர்வை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

    அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள இனிப்புக் கடை உரிமையாளர்கள், பாரம்பரிய இந்திய இனிப்புப் பெயர்களில் இருந்து "பாக்" என்ற வார்த்தையை நீக்க முடிவு செய்தனர்.

    மோதி பாக், ஆம் பாக், கோண்ட் பாக் மற்றும் மைசூர் பாக் போன்ற இனிப்புகள் மோதி ஸ்ரீ, ஆம் ஸ்ரீ, கோண்ட் ஸ்ரீ மற்றும் மைசூர் ஸ்ரீ என மறுபெயரிடப்பட்டுள்ளன. அதவாது, "பாக்" என்ற சொல் "ஸ்ரீ" என்று மாற்றப்பட்டுள்ளன. ஆனால் இது தேவையற்றது என பல நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

    இதுதொடர்பான மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதன்படி பாக் என்று சொல் இருக்கும் மற்ற பிற வார்த்தைகளையும் நெட்டிசன்கள் பெயர் மாற்றி அழைத்து வருகின்றனர்.

    உதாரணமாக பாக்டீரியா - ஸ்ரீடீரியா, பாக்யராஜ் - ஸ்ரீக்யராஜ், நிஜாம் பாக்கு - நிஜாம் ஸ்ரீ, சேப்பாக்கம் - சேஸ்ரீ, பாக்குறேன் - ஸ்ரீகுறேன், சில்லறை பாக்கி - சில்லறை ஸ்ரீகி என பெயர் மாற்றலாமே என கலாய்த்து வருகின்றனர்.

    கண்மூடித்தனமான தேசபக்தி, தேசத்திற்கோ, சமூகத்திற்கோ எந்த பயனையும் தராது என ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.கண்மூடித்தனமான தேசபக்தி, தேசத்திற்கோ, சமூகத்திற்கோ எந்த பயனையும் தராது என ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • இந்நிலையில் ரசிகர்கள் பலரும் சமூக வலை தளத்தில் 'விராட் கோலி' கேலி செய்து மீம்ஸ்கள் உருவாக்கி உள்ளனர்
    • வேடிக்கையான மீம்ஸ்கள் மூலம் தங்கள் எதிர்வினைகளை வெளிப்படுத்தினர்

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் 2 -வது சீசன் கடந்த பிப்ரவரி 23- ந்தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது.

    இப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், யுபி வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் என 5 அணிகள் இடம் பெற்று விளையாடின.டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று இறுதிப்போட்டி நடந்தது.

    இறுதி ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணி வெற்றி பெற்று, டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணிக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மகளிர் பிரீமியர் லீக் 2024 பட்டம் பெற்றது. 

    சாம்பியன் பட்டம் வென்று ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணி அசத்தியதை ரசிகர்கள் கொண்டாடினர்.

    இந்நிலையில் ரசிகர்கள் பலரும் சமூக வலை தளத்தில் 'விராட் கோலி' கேலி செய்து மீம்ஸ்கள் உருவாக்கி உள்ளனர்.மேலும்சில வேடிக்கையான மீம்ஸ்கள் மூலம் தங்கள் எதிர்வினைகளை வெளிப்படுத்தினர்.

    அதில் ஒரு சில 'மீம்ஸ்கள்' வருமாறு:

    தூள்' படத்தில் நடிகை ரீமா சென்-ஐ கவருவதற்காக உடற்பயிற்சி செய்வது போல் விவேக் ஏமாற்றுவார். அப்போது, திடீரென பறவை முனியம்மா, அந்த காகிதத்தாலான உடற்பயிற்சி பொருட்களை எல்லாம் தூக்கி எறிவார்.

    அதுமட்டுமல்லாமல், இந்த கருமத்தைதான் ராத்திரி முழுக்க ஒட்டிட்டு இருந்தியா என்று நக்கல் செய்வார். அதேபோல் பறவை முனியம்மாவாக ஆர்சிபி மகளிர் அணியையும், விவேக்காக ஆர்சிபி ஆடவர் அணியையும் மாற்றி, 16 சீசனா இந்த கோப்பையை ஜெயிக்க தான் உருட்டிட்டு இருந்தியா என்று உருவாக்கப்பட்டு உள்ளது.




     

    சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த் ஒரு வாரத்தில் வீட்டில் இருந்து புறப்படுவதை எண்ணி வடிவேலு, நாசர் மகிழ்ச்சி அடைவார்கள். அப்போது ரஜினிகாந்த், ஒரு மாதம் இருந்து செய்ய வேண்டிய வேலையை ஒரு வாரத்தில் முடித்துவிட்டேன் என்பார்.

    அதனை ஆர்சிபி மகளிர் அணி பேசுவதாக மாற்றி, எங்களோட ஆடவர் அணி 16 வருஷமா பண்ணாததை.. நாங்கள் 2 சீசனிலேயே செய்து முடித்துவிட்டோம் என்று உருவாக்கப்பட்டு உள்ளது

    அதேபோல நடிகர் வடிவேலு அரசியல் வாதியாக வெள்ளை வேட்டி, சட்டை துண்டு அணிந்து மிரட்டலாக நடந்து வருவது போலவும் அவருக்கு அடியாளாக கம்புடன் விராட் கோலி நடந்து வருவது போலவும் " பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக 16 வருசமாக காத்திருந்த ஒரே டீம்" ..என்ற வாசகத்துடனும் மீம்ஸ் உருவாக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல கிரிக்கெட் ரசிகர்கள் ஆயிரக்கணக்கான மீம்ஸ்கள் உருவாக்கி இணைய தளத்தில் பதிவிட்டு உள்ளனர்.

    • எலான் மஸ்க் 'தப்பாட்டம்' படத்தின் காட்சி ஒன்றின் மூலம் உருவாக்கப்பட்ட மீம்ஸ் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
    • ஒரு தமிழ்ப் படத்தை வைத்து உருவாக்கிய மீம்ஸை எலாக் மஸ்க் உலக அளவில் பிரபலமாக்கிவிட்டார்.

    டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க், அவருக்குச் சொந்தமான எக்ஸ் தளத்தில் தமிழ்ப் படமான 'தப்பாட்டம்' படத்தின் காட்சி ஒன்றின் மூலம் உருவாக்கப்பட்ட மீம்ஸ் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

    ஒரு இளநீரை படத்தின் நாயகி ஸ்டிரா வைத்து குடிக்க, அந்த நாயகியின் வாயிலிருந்து ஒரு ஸ்டிராவை வைத்து நாயகன் குடிக்கும் ஒரு காட்சி அது.

    2017ம் ஆண்டு முஜிபூர் ரஹ்மான் இயக்கத்தில் துரை சுதாகர், டோனா ரொசாலியோ நடித்த படமான 'தப்பாட்டம்' படத்தின் அந்த ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பல மீம்ஸ்களாக பல முறை பரவியிருக்கிறது.

    "ஐபோன், ஆப்பிள், டேட்டா" ஆகியவற்றை மையமாக வைத்து யாரோ ஒருவர் உருவாக்கிய மீம்ஸ் ஒன்றை இன்று எலான் மஸ்க் பகிர்ந்துள்ளார்.

    ஒரு தமிழ்ப் படத்தை வைத்து உருவாக்கிய மீம்ஸை எலாக் மஸ்க் உலக அளவில் பிரபலமாக்கிவிட்டார்.

    இந்நிலையில், தப்பாட்டம் படத்தின் கதாநாயகன் துரை சுதாகர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "சிறு முதலீட்டுடன் எடுக்கப்பட்ட என் படத்தை உலகளவில் பேமஸ் ஆக்கிய எலான் மஸ்க்கிற்கு ரொம்ப நன்றி. இது தமிழ் திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம். எலான் மஸ்க்கிற்கு இந்த மீம் சென்று சேர உதவிய மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு எனது நன்றிகள்" என்று அவர் தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×