என் மலர்tooltip icon

    இந்தியா

    மைசூர் ஸ்ரீ ஆன மைசூர் பாக் - இணையத்தில் வைரலாகும் மீம்ஸ் - பங்கம் செய்யும் நெட்டிசன்கள்
    X

    'மைசூர் ஸ்ரீ' ஆன 'மைசூர் பாக்' - இணையத்தில் வைரலாகும் மீம்ஸ் - பங்கம் செய்யும் நெட்டிசன்கள்

    • இது தேவையற்றது என பல நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
    • சில்லறை பாக்கி - சில்லறை ஸ்ரீகி என பெயர் மாற்றலாமே என கலாய்த்து வருகின்றனர்.

    இந்தியா பாகிஸ்தான் மோதலை அடுத்து பலர் தங்கள் தேசிய உணர்வை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

    அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள இனிப்புக் கடை உரிமையாளர்கள், பாரம்பரிய இந்திய இனிப்புப் பெயர்களில் இருந்து "பாக்" என்ற வார்த்தையை நீக்க முடிவு செய்தனர்.

    மோதி பாக், ஆம் பாக், கோண்ட் பாக் மற்றும் மைசூர் பாக் போன்ற இனிப்புகள் மோதி ஸ்ரீ, ஆம் ஸ்ரீ, கோண்ட் ஸ்ரீ மற்றும் மைசூர் ஸ்ரீ என மறுபெயரிடப்பட்டுள்ளன. அதவாது, "பாக்" என்ற சொல் "ஸ்ரீ" என்று மாற்றப்பட்டுள்ளன. ஆனால் இது தேவையற்றது என பல நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

    இதுதொடர்பான மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதன்படி பாக் என்று சொல் இருக்கும் மற்ற பிற வார்த்தைகளையும் நெட்டிசன்கள் பெயர் மாற்றி அழைத்து வருகின்றனர்.

    உதாரணமாக பாக்டீரியா - ஸ்ரீடீரியா, பாக்யராஜ் - ஸ்ரீக்யராஜ், நிஜாம் பாக்கு - நிஜாம் ஸ்ரீ, சேப்பாக்கம் - சேஸ்ரீ, பாக்குறேன் - ஸ்ரீகுறேன், சில்லறை பாக்கி - சில்லறை ஸ்ரீகி என பெயர் மாற்றலாமே என கலாய்த்து வருகின்றனர்.

    கண்மூடித்தனமான தேசபக்தி, தேசத்திற்கோ, சமூகத்திற்கோ எந்த பயனையும் தராது என ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.கண்மூடித்தனமான தேசபக்தி, தேசத்திற்கோ, சமூகத்திற்கோ எந்த பயனையும் தராது என ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    Next Story
    ×