என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalamkaval"

    • க்ரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் விநாயகனும், வில்லனாக மம்மூட்டியும் நடித்துள்ளனர்.
    • இப்படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியது.

    மலையாள திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் மம்மூட்டி. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான 'பிரம்மயுகம்' படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

    இதனை தொடர்ந்து 'குரூப்' படத்தின் இணை எழுத்தாளரான ஜித்தின் கே.ஜோஸ் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி நடித்துள்ள படம் 'களம் காவல்'. க்ரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் விநாயகனும், வில்லனாக மம்மூட்டியும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியது.

    இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில் 'களம் காவல்' நாளை திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், 'களம் காவல்' படம் நாளை வெளியாகாது என்றும் டிசம்பர் மாதம் 5-ந்தேதி வெளியாகும் என்றும் போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.


    • படத்தின் இசையை முஜீப் மஜீத் மேற்கொண்டுள்ளார்.
    • நெகட்டிவ் கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருக்கிறார்.

    குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை எழுதிய ஜித்தின் கே ஜோஷ் இயக்கத்தில் மம்மூட்டியின் அடுத்த திரைப்படமான களம்காவல் உருவாகி உள்ளது. படத்தின் இசையை முஜீப் மஜீத் மேற்கொண்டுள்ளார். இந்த படத்தில் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் காவல்துறைக்குச் சவால்விடும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருக்கிறார். இப்படத்தை அவரின் தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பெனி தயாரித்துள்ளது.

    அண்மையில் படத்தின் முதல் பாடல் வெளியான நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது .

    இப்படம் நவம்வர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  

    • மம்மூட்டி சமீபத்தில் உடல்நிலை சரியாகி கம்பேக் கொடுத்துள்ளார்.
    • ஜித்தின் கே ஜோஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

    மம்மூட்டி நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான டொமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ் மற்றும் பசூக்கா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து மம்மூட்டி சில உடல்நிலை காரணங்களால் 7 மாத காலம் சிகிச்சையில் இருந்து சமீபத்தில் உடல்நிலை சரியாகி கம்பேக் கொடுத்துள்ளார்.

    மம்மூட்டியின் அடுத்த திரைப்படமான களம்காவல் படத்தை குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை எழுதிய ஜித்தின் கே ஜோஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இதுவரை பார்த்திராத கதாப்பாத்திரத்தில் மம்மூட்டி நடித்துள்ளார். படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரு வில்லத்தனமான சிரிப்பு காட்சி இடம்பெற்றுள்ளது. படத்தின் டீசர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தின் இசையை முஜீப் மஜீத் மேற்கொண்டுள்ளார்.

    • குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை எழுதிய ஜித்தின் கே ஜோஷ் இந்தப் படத்தை இயக்குகிறார்.
    • இந்த படத்தில் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    மம்மூட்டி நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான டொமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ் மற்றும் பசூக்கா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    மம்மூட்டியின் அடுத்த திரைப்படத்தை குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை எழுதிய ஜித்தின் கே ஜோஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    இந்த படத்திற்கு 'களம்காவல்' என்று பெயரிடப்பட்டுள்ளது. டைட்டில் போஸ்டரை வெளியிட்டு, இதுவரை பார்த்திராத மம்மூட்டியைக் காணத் தயாராக இருங்கள் என படக்குழுவினர் சமீபத்தில் தெரிவித்தது.

    இந்நிலையில் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

    • மம்மூட்டியின் அடுத்த திரைப்படமான `களம்காவல்' படத்தை ஜிதின் கே ஜோஷ் இயக்குகிறார்.
    • இந்த படத்தில் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    மம்மூட்டி நடிப்பில் கடந்த மாதம் வெளியான டொமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ் மற்றும் பசூக்கா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    மம்மூட்டியின் அடுத்த திரைப்படத்தை குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை எழுதிய ஜிதின் கே ஜோஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    இந்த படத்திற்கு 'களம்காவல்' என்று பெயரிடப்பட்டுள்ளது. டைட்டில் போஸ்டரை வெளியிட்டு, இதுவரை பார்த்திராத மம்மூட்டியைக் காணத் தயாராக இருங்கள் என படக்குழுவினர் சமீபத்தில் தெரிவித்தது.

    இந்நிலையில் படத்தின் செகண்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் இந்தாண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

    ×