தள்ளிப்போகும் 'களம் காவல்' படத்தின் வெளியீடு

க்ரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் விநாயகனும், வில்லனாக மம்மூட்டியும் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியது.
தள்ளிப்போகும் 'களம் காவல்' படத்தின் வெளியீடு
Published on

மலையாள திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் மம்மூட்டி. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான 'பிரம்மயுகம்' படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து 'குரூப்' படத்தின் இணை எழுத்தாளரான ஜித்தின் கே.ஜோஸ் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி நடித்துள்ள படம் 'களம் காவல்'. க்ரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் விநாயகனும், வில்லனாக மம்மூட்டியும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியது.

இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில் 'களம் காவல்' நாளை திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், 'களம் காவல்' படம் நாளை வெளியாகாது என்றும் டிசம்பர் மாதம் 5-ந்தேதி வெளியாகும் என்றும் போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com