கல்லீரல் நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த கேரள நடிகர் விஷ்ணு பிரசாத் மரணம்

கேரளாவை சேர்ந்த பிரபல நடிகர் விஷ்ணு பிரசாத். இவர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டார்.
கல்லீரல் நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த கேரள நடிகர் விஷ்ணு பிரசாத் மரணம்
Published on

கேரளாவை சேர்ந்த பிரபல நடிகர் விஷ்ணு பிரசாத். மலையாள திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வந்த இவர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டார்.

இதனால் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டியிருந்தது. அவரது மகள் கல்லீரல் தானம் செய்ய முன்வந்திருந்த நிலையில், அறுவை சிகிச்சைக்கு ரூ.30லட்சத்திற்கும் மேல் பணம் தேவைப்பட்டது.

அந்த தொகையை திரட்டும் பணியில் நடிகரின் குடும்பத்தினர் ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விஷ்ணு பிரசாத் இறந்தார். அவரது மரணத்தை நடிகர் கிஷோர் சத்யா தனது சமூகவலைதள பதிவின் மூலம் இன்று அறிவித்தனர். நடிகரின் குடும்பத்தினருக்கு மலையாள திரையுலகை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com