என் மலர்
விளையாட்டு

பி.டி. உஷா கணவர் காலமானார்
- கேரளாவின் திக்கோடி உள்ள வீட்டில் ஸ்ரீனிவாசன் மயங்கி விழுந்துள்ளார்.
- உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோட்ைட சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை பி.டி.உஷா. சர்வதேச தடகள போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்று ஏராளமான பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள இவர் "இந்திய தடகளங்களின் அரசி" என்று குறிப்பிடப்படுகிறார்.
பி.டி.உஷா தற்போது இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருக்கிறார். இவரது கணவர் ஸ்ரீனிவாசன் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் துணை போலீஸ் சூபபிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.
பி.டி.உஷா பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றிருந்தார். ஆகவே கோழிக்கோடு மாவட்டம் கொயிலாண்டி அருகே திக்கோடியில் உள்ள அவரது வீட்டில் கணவர் ஸ்ரீனிவாசன் இருந்தார். அவர் இன்று அதிகாலை திடீரென தனது வீட்டில் மயங்கி விழுந்தார்.
இதையடுதது அவர் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக, அவரை பரி சோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் வீடடிற்கு கொண்டு வரப்பட்டது.
ஸ்ரீனிவாசன் இறந்தது குறித்து டெல்லியில் இருந்த பி.டி.உஷாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக கேரளா விரைந்தார். பி.டி.உஷா-ஸ்ரீனிவாசன் தம்பதிக்கு உஜ்வல் விக்னேஷ் என்ற மகன் இருக்கிறார். அவர் டாக்டர் ஆவார்.






