என் மலர்
நீங்கள் தேடியது "சரோஜா"
- கிழக்கே போகும் ரயில், ஐயா, வேங்கை என 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
- சீனிவாசன் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை:
தமிழ் சினிமாவில் 1970, 80களில் துணை கதாபாத்திரங்கள் மற்றும் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்தவர் ஜி.சீனிவாசன்.
இவர் கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், கன்னி பருவத்திலே, ராணுவ வீரன், இதயகோவில், ஐயா, நகரம், வேங்கை என 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். சில படங்களில் துணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். ஓரிரு படங்களையும் இயக்கியுள்ளார். இவரது மனைவி சினிமாவின் மறைந்த பிரபல நடன இயக்குனரான புலியூர் சரோஜா ஆவார்.
கடந்த சில நாட்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக சீனிவாசன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நேற்று அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 95. சீனிவாசன் உடல், சென்னை அசோக்நகர் இந்திரா காலனியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
சீனிவாசன் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சரோஜா’.
- இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.
முன்னணி இயக்குனரான வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'சரோஜா'. இப்படத்தில் வைபவ், பிரகாஷ் ராஜ், எஸ்.பி.சரண், பிரேம் ஜி, காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். ஆக்ஷன், காமெடி ஜானரில் உருவாகியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.

இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். அதிலும் 'கோடான கோடி' பாடல் பட்டித் தொட்டி எங்கும் பரவி இன்று வரையிலும் மக்களை வைப்பாக்கும் ஒரு பாடலாக இருக்கிறது. 'சரோஜா' திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் கடந்துள்ளது. இதனை மும்பையில் படக்குழு கொண்டாடியுள்ளது. இதில் இயக்குனர் பா.இரஞ்சித் கலந்து கொண்டுள்ளார்.

மேலும், விமான நிலையத்தில் நடிகர் சூர்யாவை இயக்குனர் வெங்கட் பிரபு சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை வெங்கட் பிரபு தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.






