என் மலர்
சினிமா செய்திகள்

நட்பு, காதல், சந்தோஷத்தின் பிரதேசமான 'பூங்கா' - திரைவிமர்சனம்
- நண்பன் விஷ்ணு, கெளஷிக் பணிபுரியும் நிறுவனத்தில் டீம் லீடராகிறான்.
- காதல் மோதலுடன் கமர்ஷியலாக சொல்ல முயற்சி செய்து இருக்கிறார்.
நாயகன் கெளஷிக் உட்பட நான்கு பேர் சென்னையிலுள்ள ஒரு பூங்காவில் சந்தித்துப் பழகி நட்பாகிறார்கள். பூங்கா மூலம் கிடைத்த நண்பன் விஷ்ணு, கெளஷிக் பணிபுரியும் நிறுவனத்தில் டீம் லீடராகிறான். ஒரு கட்டத்தில் அந்த விஷ்ணுவை கெளஷிக் கடுமையாக தாக்குகிறான். நட்பில் விரிசல் ஏற்படுகிறது. அது மட்டுல்லாது பூங்காவுக்கு தன் காதலியுடன் வந்து போய்க் கொண்டிருக்கும் இன்னொரு இளைஞனையும் கெளஷிக் அடிக்கிறார்.
இறுதியில் கெளஷிக் அவர்கள் மீது அப்படி என்னதான் கோபம்? எதற்காக அப்படி நடந்துகொள்கிறார்? நண்பர்களுக்குள் உருவான பிரச்சனை தீர்ந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் கெளஷிக், காதல், கோபம் என நடிப்பில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். நாயகியாக நடித்து இருக்கும் ஆரா, காதலுக்குத் தேவையான மயக்கம், கிறக்கம், நடனம் என தன் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்.
பிராணா, பாலசுப்பிரமணியம், பூங்கா ராமு, திண்டுக்கல் மணிகண்டன், நோயல் ரெஜி, மேஜிக் சரவணகுமார், ஸ்ரீதேவி, ஸ்மூல் ராஜா, சாய் ஜேபி, வரன், கோவிந்தராஜ் ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.
நட்பு, உறவு, சந்தோஷத்தை பூங்காக்களில் சுற்றித்திரிகிற மனிதர்கள் மூலம் பெற முடியும் என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் கே.பி.தனசேகர். இதில் காதல் மோதலுடன் கமர்ஷியலாக சொல்ல முயற்சி செய்து இருக்கிறார். திரைக்கதை வழுவில்லாமல் நகர்த்தி இருக்கிறார்.
அகமது விக்கியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ஆர்.ஹெச்.அசோக்கின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
மாலைமலர் ரேட்டிங் : 2 / 5






