என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விஜய் சேதுபதியின் பான்-இந்தியா படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
    X

    விஜய் சேதுபதியின் பான்-இந்தியா படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

    • விஜய் சேதுபதியின் பான்-இந்தியா ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது.
    • தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    தலைவன், தலைவி படத்திற்கு பின் பூரி ஜெகன்நாத்தின் பான்-இந்தியா ஆக்ஷன் படத்தில் விஜய் சேதுபதி கமிட் ஆகியிருந்தார். இப்படத்தில் நடிகைகள் தபு மற்றும் சம்யுக்தா இணைந்தனர். இந்த அறிவிப்பே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்படத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சார்மி கவுர் தெரிவித்துள்ளார். முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.


    பிரம்மாஜி, துனியா விஜய் ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் தலைப்பு செப்டம்பர் மாதம் வெளியாக இருந்தநிலையில், சிலகாரணங்களால் வெளியிடப்படவில்லை. விரைவில் தலைப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×