என் மலர்
நீங்கள் தேடியது "ஓ.டி.டி. தொடர்"
- மகா கும்பமேளாவின் போது இந்தியாவிற்கு ஏற்படும் ஒரு பிரச்சனையை நந்தமுரி பாலகிருஷ்ணா எப்படி தீர்க்கிறார் என்பதே அகண்டா 2
- 2025-ஆம் ஆண்டு வெளியான ஒரு முக்கியமான தமிழ்த் திரைப்படம் 'அங்கம்மாள்’.
தெலுங்கு, தமிழ், ஆங்கிலம் என பல்வேறு மொழிப்படங்கள் மற்றும் வெப் சிரீஸ்களை இந்த வாரம் வெளியிடுகிறது இந்திய ஓடிடி தளங்கள். அந்த வகையில் இந்த வாரம் எந்தெந்த படங்கள், எந்தெந்த ஓ.டி.டிகளில் வெளியாகிறது என்பதுகுறித்து பார்ப்போம்.
'Constable Kanakam' சீசன் 2
வர்ஷா பொல்லம்மா நடித்துள்ள வெப் சிரீஸ்தான் 'Constable Kanakam' சீசன் 2. இதன் முதல்பாகத்தை தொடர்ந்து இரண்டாவது பாகம் தற்போது வெளியாக உள்ளது. இந்த வெப் சிரீஸ் ETVWin ஓ.டி.டி தளத்தில் நாளை (ஜன.8) வெளியாக உள்ளது.
SilentScreams
தெலங்கானாவில் பெண்கள் கடத்தப்படுவது தொடர்பான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவான படம் "Silent Screams: The Lost Girls of Telangana". இப்படம் நாளை சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாகிறது. நடிகை ஸ்ருதி ஹாசன் இந்த ஆவணப்படத்திற்கு குரல் கொடுத்துள்ளார்.
Weapons
சாக் க்ரெக்கர் (Zach Cregger) இயக்கிய ஒரு அமெரிக்க மர்ம ஹாரர் த்ரில்லர் திரைப்படம் வெப்பன்ஸ். ஒரே இரவில் காணாமல் போகும் 17 குழந்தைகளை மையமாக கொண்டு நகரும் இப்படம் சுமார் $269 மில்லியன் வசூலித்து பெரும் வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் நாளை (ஜன.8) ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
மாஸ்க்
கவின், ஆண்ட்ரியா நடிப்பில் அசோக் விக்ரனன் இயக்கிய படம் மாஸ்க். கடந்த நவம்பர் மாதம் வெளியாகி, வித்தியாசமான கதைகளத்தில் கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் ஜன.9 அன்று Zee5-ல் வெளியாகிறது.
அங்கம்மாள்
விபின் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் 2025-ஆம் ஆண்டு வெளியான ஒரு முக்கியமான தமிழ்த் திரைப்படம் 'அங்கம்மாள்'. எழுத்தாளர் பெருமாள் முருகனின் 'கோடித்துணி' என்ற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம், கடந்த மாதம் வெளியாகி விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக கீதா கைலாசத்தின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் இப்படம் சன் நெக்ஸ்-இல் ஜன.9 அன்று வெளியாகிறது.
அகண்டா 2: தாண்டவம்
மகா கும்பமேளாவின் போது இந்தியாவிற்கு ஏற்படும் ஒரு பிரச்சனையை நந்தமுரி பாலகிருஷ்ணா எப்படி தீர்க்கிறார் என்பதே அகண்டா 2: தாண்டவம். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என கடந்த மாதம் ஐந்து மொழிகளில் வெளியான இப்படம் நெட்பிளிக்ஸில் ஜன.9 அன்று வெளியாகிறது.
The Night Manager
ஜான் லீ கார்ரேவின் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட தொடர் The Night Manager. நீண்ட இடைவேளைக்குப் பிறகு, சீசன் 2 ஜனவரி 1, 2026 அன்று வெளியானது. இந்நிலையில் PrimeVideo ஓ.டி.டி. தளத்தில் ஜன.11 அன்று வெளியாகிறது.
- ஸ்டிரேஞ்சர் திங்ஸ் நான்கு மொழிகளில் வெளியானது
- விக்ராந்தின் லவ் பியாண்ட் விக்கெட் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகியது
புது ஆண்டை குதூகலிக்கும் வகையில் இந்த வாரம் முழுவதும் எண்ணற்ற படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை வெளியிடுகிறது ஓடிடி தளங்கள். அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி மற்றும் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
மௌக்லி
நடிகர் ரோஷன் கனகாலா, இயக்குனர் சந்தீப் ராஜ் ஆகியோர் இணைந்த இரண்டாவது படம் 'மௌக்லி'. இப்படம் டிச.13 அன்று 'அகண்டா 2' திரைப்படத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் இன்று ETV Win ஓ.டி.டி தளத்தில் வெளியானது.
லவ் பியாண்ட் விக்கெட்
விக்ராந்த் நடித்திருக்கும் ஒரு தமிழ் வெப் சீரிஸ் லவ் பியாண்ட் விக்கெட். கிரிக்கெட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த வெப் சிரீஸ் இன்றுமுதல் ஜியோஹாட்ஸ்டார் ப்ரீமியர் தளத்தில் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் நான்கு எபிசோட்கள் வெளியாகும்.

ஸ்டிரேஞ்சர் திங்ஸ்
ஸ்டிரேஞ்சர் திங்ஸ் (Stranger Things) சீசன் 5, மூன்று பாகங்களாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் நெட்ஃபிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஹக்
யாமி கௌதம் தார் மற்றும் இம்ரான் ஹாஷ்மி நடித்த படம் ஹக். கடந்த நவம்பர் மாதம் வெளியான இப்படம் பாக் ஆபிஸில் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், அதன் கருப்பொருள் மற்றும் நடிப்பிற்காக பாராட்டப்பட்டது. இந்நிலையில் நாளை நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் இப்படம் வெளியாகிறது.
கும்கி2
கும்கி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, எடுக்கப்பட்ட படம் அதன் தொடர்ச்சியான கும்கி 2. இதனையும் பிரபு சாலமன்தான் இயக்கினார். இப்படம் நவம்பர் மாதம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றநிலையில் ஜன.3 அன்று ப்ரைம் வீடியோ ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.
- முன்னணி நடிகர், நடிகைகள் ஓ.டி.டி. படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
- ஒரு எபிசோட்டில் நடிக்க ரூ.18 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது.
ஓ.டி.டி. தளங்கள் சமீப காலத்தில் அசுர வளர்ச்சி பெற்றுள்ளன. தியேட்டர்களுக்கு சென்று படம் பார்ப்பதை விட ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் தொடர்களை பார்க்கவே ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஓ.டி.டி.யில் வெளியிடுவதற்காகவே பிரத்யேகமாக படங்கள், வெப் தொடர்கள் தயாராகின்றன. முன்னணி நடிகர், நடிகைகள் ஓ.டி.டி. படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இதில் அதிக சம்பளமும் கிடைக்கிறது.
இந்த நிலையில் ஓ.டி.டி. தொடர்களில் நடிக்க அதிக சம்பளம் பெறும் நடிகர்கள் விவரம் வெளியாகி இருகிறது. இந்த பட்டியலில் இந்தி நடிகர் அஜய்தேவ்கான் முதல் இடத்தில் இருக்கிறார். இவர் ஓ.டி.டி. வெப் தொடரில் ஒரு எபிசோட்டில் நடிக்க ரூ.18 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது.

அஜய்தேவ்கான் நடிப்பில் சமீபத்தில் `ருத்ரா' என்ற வெப் தொடர் வெளியானது. இதில் 7 எபிசோடுகள் இருந்தன. ஒரு எபிசோடுக்கு ரூ.18 கோடி வீதம் மொத்தம் ரூ.126 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது. இவருக்கு அடுத்து இந்தி நடிகர் மனோஜ் பஜ்பாய் ஒரு எபிசோடுக்கு ரூ.10 கோடி பெறுகிறார்.



நடிகைகள் தமன்னா, சமந்தா, பிரியங்கா சோப்ரா ஆகியோரும் வெப் தொடர்களில் நடிக்க அதிக சம்பளம் பெறுகிறார்கள்.






