என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    திருத்தணி சம்பவத்திற்கு தற்போதைய சினிமாவும் காரணம்- இயக்குநர் பேரரசு
    X

    திருத்தணி சம்பவத்திற்கு தற்போதைய சினிமாவும் காரணம்- இயக்குநர் பேரரசு

    • திருத்தணி ரெயில் நிலையம் அருகே வடமாநில வாலிபரை கஞ்சா போதையில் 4 சிறுவர்கள் அரிவளால் வெட்டி ரீல்ஸ் எடுத்தனர்.
    • இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பொதுமக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    திருத்தணி ரெயில் நிலையம் அருகே வடமாநில வாலிபரை கஞ்சா போதையில் 4 சிறுவர்கள் அரிவளால் வெட்டி ரீல்ஸ் எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோகாட்சி வைரலாக பரவி வருகிறது.

    இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பொதுமக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிக அளவில் இருப்பதாகவும் அதனை தடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் திருத்தணி சம்பவத்திற்கு தற்போதைய சினிமாவும் காரணம் என இயக்குநர் பேரரசு கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    திருத்தணி சம்பவத்திற்கு தற்போதைய சினிமாவும் காரணம். தற்பொழுது சில திரைப்படங்களில் வன்முறை... வன்முறை... வன்முறை...

    சமூகத்தின் மீது அரசாங்கத்திற்கு எந்த அளவிற்கு அக்கறை இருக்கிறதோ அதே அளவு திரைப்பட இயக்குநர்களுக்கும், அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகர்களுக்கும் வேண்டும்.

    என்று இயக்குநர் பேரரசு கூறினார்.

    Next Story
    ×