சின்னமனூர் : வாலிபர் கொலை வழக்கில் பெண் உள்பட 3 பேர் கைது

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அலாவுதீன் மற்றும் முகமது சமீர்.
கைது செய்யப்பட்ட அலாவுதீன் மற்றும் முகமது சமீர்.
Published on

சின்னமனூர்:

தேனி மாவட்டம் சின்னமனூர் சாமிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் காபில்கான் (வயது 22). இவர் பட்டபடிப்பு முடித்து விட்டு அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டு இருந்தார். அவரது நண்பர் முகமது சமீரிடம் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தது. இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் சமீரின் சகோதரி ஷபானா என்பவருடன் காபில்கான் செல்போனில் பேசி வந்துள்ளார்.

இதனை ஷபானாவின் கணவர் அலாவுதீன் கண்டித்துள்ளார். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. இந்த நிலையில் வண்டிபேட்டை பகுதியில் காபில்கான் நின்று கொண்டு இருந்தபோது முகமது சமீர் மற்றும் அலாவுதீன் ஆகியோருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் காபில்கானை இறைச்சி வெட்டும் கத்தியால் வெட்டினர். மேலும் உடலில் சரமாரியாக குத்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து சின்னமனூர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலை வழக்கில் தொடர்புடைய முகமது சமீர், அலாவுதீன், ஷபானா ஆகிய 3 பேரை கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com