ஆபீஸ் ரூமில் ஆபாசம்.. லீக் ஆன வீடியோக்கள் - கர்நாடக டிஜிபி ராமச்சந்திர ராவ் பணியிடைநீக்கம்

சீருடை அணிந்த நிலையில் பெண்களை கட்டியணைத்து முத்தமழை பொழிந்த ஆபாச வீடியோக்கள் வெளியாகின.யாரோ சதி செய்து வீடியோக்களை வெளியிட்டுள்ளனர் என்றும் ராமசந்திர ராவ் தெரிவித்தார்.
ஆபீஸ் ரூமில் ஆபாசம்.. லீக் ஆன வீடியோக்கள் - கர்நாடக டிஜிபி ராமச்சந்திர ராவ் பணியிடைநீக்கம்
Published on

கர்நாடக மாநில குடிமை உரிமைகள் அமலாக்க பிரிவு போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்து வருபவர் ராமசந்திர ராவ் (வயது 59). இவரது வளர்ப்பு மகள் நடிகை ரன்யா ராவ் துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்த வழக்கில் சிறையில் உள்ளார்.

தங்கம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த விவகாரத்தில் ராமசந்திர ராவும் சிக்கி இருந்தார். கடந்த ஆண்டு ராமசந்திர ராவை கட்டாய விடுப்பில் அரசு அனுப்பி வைத்திருந்தது. மாத கணக்கில் அவருக்கு பொறுப்பு வழங்காமல் அரசு இருந்தது.

அதன்பிறகு தான் குடிமை உரிமைகள் அமலாக்க பிரிவு டி.ஜி.பி.யாக ராமசந்திர ராவ் நியமிக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில், ராமசந்திர ராவ் தனது அலுவலகத்திலேயே சீருடை அணிந்த நிலையில் பெண்களை கட்டியணைத்து முத்தமழை பொழிந்ததுடன் உடல்களை தொட்டு லீலையில் ஈடுபட்ட ஆபாச வீடியோக்கள் நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமசந்திர ராவ் பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் 3 வீடியோக்கள் வெளியாகி உள்ளன. அதில், 2 வீடியோக்களில் அவர் சீருடை அணிந்து கொண்டு இருக்கிறார். மற்றொரு வீடியோவில் மட்டும் சாதாரண உடையை அவர் அணிந்திருக்கிறார்.

அது போலி வீடியோக்கள் என்றும் யாரோ சதி செய்து வீடியோக்களை வெளியிட்டுள்ளனர் என்றும் ராமசந்திர ராவ் தெரிவித்தார்.

இந்த வீடியோக்கள் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் கர்நாடக மாநில போலீஸ் டிஜிபி பதவியில் இருந்து ராமசந்திர ராவ் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.    

X

Maalai Malar
www.maalaimalar.com