என் மலர்

  நீங்கள் தேடியது "chennai police commissioner"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை முழுவதும் செப்டம்பர் மாத இறுதிக்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நிறைவடையும் என சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் இன்று தெரிவித்தார்.
  சென்னை :

  சென்னை மயிலாப்பூர் காவல் நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நூலகம், நடைபாதை, உடற்பயிற்சி கூடத்தை சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் திறந்து இன்று வைத்தார்.

  அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் விஸ்வநாதன் கூறுகையில், ‘ வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் சென்னை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். சென்னை மக்கள் அனைவரும் ஆர்வமுடன் சி.சி.டி.வி கேமராக்களை பொருத்தி வருகின்றனர்.

  தங்கள் வீட்டை பார்பத்து இருப்பது போல் மட்டும்  சி.சி.டி.வி கேமராக்களை அமைக்காமல் வீடு அமைந்துள்ள தெருவை கண்காணிக்கும் விதத்திலும் கேமாரக்களை பொருத்த வேண்டும்.

  காவலர்கள் படிப்பதற்காக மயிலாப்பூர் காவல்நிலையத்தில் திறக்கப்பட்ட நூலகம் போன்று அனைத்து காவல்நிலையங்களிலும் நூலகங்களை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என அவர் தெரிவித்தார்.

  காவலர்கள் படிப்பதற்கென பிரத்யேகமாக காவல்நிலையத்தில் நூலகம் திறக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
  ×