search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "manager death"

    • தனியார் போர்வெல் கம்பெனியில் மேலாளராக வேலை செய்து வந்தார்.
    • டிராக்டரின் பின்னால் மோதியதில், தமிழ்ச்செல்வன் மோட்டார் பைக்குடன் நிலை தடுமாறி சாலையில் விழுந்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா மணியனூர் அருகே பீச்ச பாளையம் மேட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 38).

    மொபட் மோதியது

    இவர் சித்தாளந்தூரில் உள்ள ஒரு தனியார் போர்வெல் கம்பெனியில் மேலாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் போர்வெல் வாகனத்தின் உரிமையாளர் செந்தில்குமார், தமிழ்ச்செல்வனுக்கு போன் செய்து போர்வெல் வண்டிக்கு சாமான்கள் வாங்க வேண்டும்.

    எனவே உடனடியாக பரமத்தி வரும்படி கூறியுள்ளார். அதன் பேரில் தனது மோட்டார் பைக்கில் பரமத்தி சென்று விட்டு இரவு சுமார் 7 மணி அளவில் கந்தம்பாளையம் - திருச்செங்கோடு சாலையில் உள்ள மணல் விற்பனை நிலையம் அருகே வந்து கொண்டிருந்தார்.

    அப்போது சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த டிராக்டரின் பின்னால் மோதியதில், தமிழ்ச்செல்வன் மோட்டார் பைக்குடன் நிலை தடுமாறி சாலையில் விழுந்தார்.

    இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    இதுகுறித்து தமிழ்ச்செல்வனின் மனைவி மகேஷ் (22), நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சாந்தகுமார், தமிழ்ச்செல்வனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரையில் உள்ள தனியார் விடுதியில் லாட்ஜ் மேலாளர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • அவருக்கு மாரடைப்பு உள்ளிட்ட நோய் இருந்து வந்ததாக தெரியவந்தது.

    மதுரை

    மதுரை டவுன்ஹால் ரோடு, பெருமாள் தெப்பம் வடக்கு தெருவில் ஒரு தனியார் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு விருதுநகர் மாவட்டம் பாலவநத்தத்தை சேர்ந்த தர்மராஜ் (வயது 55) என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக திடீர்நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதன் அடிப்படையில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அங்கு தலை மற்றும் மூக்கில் ரத்தக்காயங்களுடன் லாட்ஜ் மேலாளர் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது.

    அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மதுரை தெற்கு துணை கமிஷனர் சீனிவாசபெருமாள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார்.

    திடீர்நகர் போலீசாரின் விசாரணையில், 'மதுரை தங்கும் விடுதி மேலாளர் தர்மராஜுக்கு மாரடைப்பு உள்ளிட்ட நோய் இருந்து வந்ததாக தெரியவந்தது.

    அவருக்கு நள்ளிரவில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தொடர்பாக திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×