லாட்ஜ் மேலாளர் மர்மச்சாவு

மதுரையில் உள்ள தனியார் விடுதியில் லாட்ஜ் மேலாளர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவருக்கு மாரடைப்பு உள்ளிட்ட நோய் இருந்து வந்ததாக தெரியவந்தது.
தர்மராஜ்
தர்மராஜ்
Published on

மதுரை

மதுரை டவுன்ஹால் ரோடு, பெருமாள் தெப்பம் வடக்கு தெருவில் ஒரு தனியார் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு விருதுநகர் மாவட்டம் பாலவநத்தத்தை சேர்ந்த தர்மராஜ் (வயது 55) என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக திடீர்நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அங்கு தலை மற்றும் மூக்கில் ரத்தக்காயங்களுடன் லாட்ஜ் மேலாளர் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது.

அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மதுரை தெற்கு துணை கமிஷனர் சீனிவாசபெருமாள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார்.

திடீர்நகர் போலீசாரின் விசாரணையில், 'மதுரை தங்கும் விடுதி மேலாளர் தர்மராஜுக்கு மாரடைப்பு உள்ளிட்ட நோய் இருந்து வந்ததாக தெரியவந்தது.

அவருக்கு நள்ளிரவில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தொடர்பாக திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com