என் மலர்
நீங்கள் தேடியது "Afghanistan Rain"
- 1,200-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
- ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
ஆப்கானிஸ்தானின் ஹெராத், கந்தஹார், ஹெல்மண்ட் உள்ளிட்ட பல மாகாணங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கனமழையால் அங்கு திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஹெராத் மாகாணத்தின் கப்கான் மாவட்டத்தில் ஒரு வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியும், மின்சாரம் தாக்கியும் இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர். 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். 1,200-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. கனமழை-வெள்ளம் காரணமாக நாட்டின் மத்திய, வடக்கு, தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகள் முழுவதும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி உள்ளன என்று ஆப்கானிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது யூசுப் ஹம்மாத் தெரிவித்தார்.
- கடந்த மே மாதம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகினர்.
- உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தான் காலநிலை மாற்றத்தின் பாதிப்பு காரணமாக இயற்கை பேரிடர் சம்பவங்களுக்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் நேற்று மாலை இடியுடன் கூடிய பெய்த பலத்த மழையால் ஜலாலாபாத் மற்றும் நங்கர்ஹர் மாகாணத்தில் மரங்கள், சுவர்கள் மற்றும் வீடுகளின் கூரைகள் இடிந்து விழுந்ததில் 35 பேர் உயிரிழந்தனர். மேலும் 230 பேர் படுகாயமடைந்தனர்.
காயம் அடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் நங்கர்ஹார் பிராந்திய மருத்துவமனை மற்றும் பாத்திமா-துல்-சஹ்ரா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்கள் உடல்களும் இதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டன.
இதுகுறித்து தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் துயரத்தில் நாங்கள் பங்கு கொள்கிறோம். இஸ்லாமிய எமிரேட்டின் தொடர்புடைய நிறுவனங்கள் விரைவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் மருந்துகளை வழங்குவார்கள்," என்றார்.
கடந்த மே மாதம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகினர். மேலும் விவசாய நிலங்கள் சேதமாயின. உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தான் காலநிலை மாற்றத்தின் பாதிப்பு காரணமாக இயற்கை பேரிடர் சம்பவங்களுக்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.






