என் மலர்
இந்தியா

இந்துக்கள் ஒருபோதும் பயங்கரவாதிகளாக இருக்கவே மாட்டார்கள் - அமித் ஷா
- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானதற்கு காங்கிரஸின் கொள்கைகளே காரணம்.
- பயங்கரவாதம் பற்றிய விவகாரங்களில் பாஜகவை கேள்வி கேட்க காங்கிரஸ் கட்சிக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து மாநிலங்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்,பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானதற்கு காங்கிரஸின் கொள்கைகளே காரணம்.
1971 போரின் போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீண்டும் பெற்றிருந்தால், இன்று பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
'காவி பயங்கரவாதம்' என்ற சொல்லைக் உருவாக்கியதன் மூலம் காங்கிரஸ் பெரும்பான்மை சமூகமான இந்துக்களை இழிவுபடுத்தியுள்ளது.
இந்துக்கள் ஒருபோதும் பயங்கரவாதிகளாக இருக்கவே மாட்டார்கள். இதனை இந்த உலகுக்கு பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அழிவின் விளிம்பில் பயங்கரவாதம் இருக்கிறது. அதற்கு முடிவு கட்டப்படும்.
காங்கிரஸ் ஆட்சியிலிருந்திருந்தால், அவர்கள் பாகிஸ்தானை அப்பாவி என்று தீர்மானித்திருப்பார்கள்.
பயங்கரவாதம் பற்றிய விவகாரங்களில் பாஜகவை கேள்வி கேட்க காங்கிரஸ் கட்சிக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை.
இன்று, நம் நாட்டுக்கு கிடைத்துள்ள பிரதமர் எதிரிகளுக்கு பிரம்மோஸ் ஏவுகணைகளால் எதிர்வினையாற்றும் வல்லமை படைத்தவர்" என்று தெரிவித்தாா்.






