என் மலர்
நீங்கள் தேடியது "நாதக"
- இறந்தவர்கள் எனக் குறிப்பிட்டு பெயர் நீக்கம்
- முன்னதாக 2002-2005 காலகட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
சிவகங்கை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இந்துஜா மற்றும் அவரது கணவர் ரமேஷ் ஆகியோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக, இருவரும் மாவட்ட ஆட்சியர் பொற்கொடியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
உயிருடன் இருக்கையில் இறந்தவர்கள் எனக் குறிப்பிட்டு தங்கள் பெயர் நீக்கப்பட்டதாக இந்துஜா, மாவட்ட ஆட்சியர் பொற்கொடியிடம் முறையிட்டார். அதற்கு பதிலளித்த அவர், "ஏதேனும் தவறுகள் இருந்தால் அதைச் சரி செய்வதற்காகத்தான் இந்த பட்டியலை உங்களுக்கு கொடுத்திருக்கிறோம். தவறு நடந்தால் ஊழியர்கள் மீதுத் துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும், பணியிடை நீக்கம் செய்யவும் உத்தரவிட்டுள்ளேன்," என்று விளக்கம் அளித்தார். இருப்பினும் இந்துஜா, அவரது கணவர் ஆட்சியரிடம் வாக்குவாதத்தை தொடர்ந்ததால், மாவட்ட ஆட்சியர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) கடந்த மாதம் 4ஆம் தேதி தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ளிட்ட 9 மாநிலங்களிலும் புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களிலும் இந்த எஸ்.ஐ.ஆர். பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் இதற்கு முன்பாக, 2002-2005 காலகட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.






