search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "sivagangai"

  • சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1872ம் ஆண்டு ‘தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது
  • இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் ரூ.525 கோடியை திரும்ப கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

  சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1872ம் ஆண்டு 'தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்' என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிதி நிறுவனத்தில் தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு தொகை உறுப்பினர்களாக உள்ளனர். இதில் பெரும்பாலும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் தங்களது ஓய்வூதிய பணத்தை அதிகளவில் முதலீடு செய்துள்ளனர். இந்த நிதி நிறுவனம் முதலீடு செய்யும் பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வரை வட்டி அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.

  இதனிடையே இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் ரூ.525 கோடியை திரும்ப கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் 150க்கும் மேற்பட்டோருக்கு வழங்கிய காசோலை பணம் இல்லாமல் திரும்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தினமும் பாதிக்கப்பட்டவர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

  இந்நிலையில், முதலீட்டாளர்களின் ₹525 கோடி மோசடி செய்துள்ளதாக எழுந்துள்ள புகாரால், அந்த நிதி நிறுவனத்தின் தலைவராக உள்ள சிவகங்கை பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது.

  அந்த புகாரில், "சென்னை, மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட் நிதி நிறுவனத்தின் வைப்புத்தொகையின் மீது திரட்டப்பட்ட வட்டியை முதலீட்டாளர்களுக்கு செலுத்த மறுப்பதாக கூறப்படுகிறது. அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் நிறுவனம் வழங்கிய கிட்டத்தட்ட 150 காசோலைகள் திரும்ப வந்துள்ளது.

  அந்த நிதி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், டி.தேவநாதன் சிவகங்கை தொகுதியின் பாஜக வேட்பாளர் ஆவார். பிரதமர் அவருக்காக பிரச்சாரம் செய்கிறார்.

  ஆகவே அவர் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி குற்றச் சாட்டுக்களில் இருந்து தப்பித்து விடுவாரோ என்ற அச்சம் முதலீட்டர்களுக்கு எழுந்துள்ளது.

  இத்தகைய சூழ்நிலையில் பாஜக வேட்பாளர் தேவநாதன் மீது தேர்தல் ஆணையம் தகுந்த விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

  • நூல் வெளியீட்டு விழா நடந்தது.
  • வந்தேறும் குடிகள் நூல் குறித்து மன்னர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் பேசினார்.

  சிவகங்கை

  சிவகங்கை மாவட்ட மைய நூலகத்தில் நடந்த 56-வது தேசிய நூலக வார விழாவில் வந்தேறும் குடிகள் என்ற நூலை முன்னாள் அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் சுப்பையா வெளியிட சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் பெற்றுக் கொண்டார்.

  மாவட்ட நூல் இருப்பு சரிபார்ப்பு அலுவலர் வெள்ளைச்சாமி கண்ணன் தலைமை வகித்தார். நூலகர் முத்துக்குமார் வரவேற்றார். தமிழ்ச் செம்மல் பகிரத நாச்சியப்பன் வாசிப்பின் அவசியம் குறித்து பேசினார்.

  வந்தேறும் குடிகள் நூல் குறித்து மன்னர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் பேசினார்.

  நூலகத் தன்னார்வ லர்கள் ரமேஷ் கண்ணன், தொழிலதிபர் பாண்டிவேல், நல்லாசிரியர் கண்ணப்பன், புலவர் மெய் ஆண்டவர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூல் ஆசிரியர் ஈஸ்வரன் ஏற்புரை வழங்கினார். நூலகர் கனக ராஜன் நன்றி கூறினார்.

  விழாவில் நூலகர்கள், நூலக பணியாளர்கள் மற்றும் வாசகர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  • தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது.
  • ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர் முகம்மது, அப்ரோஸ் மற்றும் பாத்திமா கனி ஆகியோர் செய்திருந்தனர்.

  மானாமதுரை

  சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டது.

  இதில் கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான் தலைமையில் மாணவ-மாணவிகள் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சேக் அப்துல்லா தேச ஒற்றுமையை வலியுறுத்தி பேசினார்.

  நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர் முகம்மது, அப்ரோஸ் மற்றும் பாத்திமா கனி ஆகியோர் செய்திருந்தனர்.

  • மானாமதுரை கோவில்களில் நவராத்திரி விழா நடந்தது.
  • 3 ஆயிரம் சுவாமி பொம்மைகள் வைத்து பிரம்மாண்டமான கொலு வைக்கப்பட்டு உள்ளது.

  மானாமதுரை

  சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட ஆனந்தவல்லி சமேத சோம நாதர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு நவராத்திரி விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள கொலு அலங்காரத்தை பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

  கடந்த 15-ந் தேதி முதல் நவராத்தி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி கோவிலில் அம்மன் சன்னதி அருகே கண்ணைக்கவரும் வகையில் கொலு அலங்காரம் வைக்கப்பட்டுள்ளது. விழா நாட்களில் தினமும் மூலவர் ஆனந்தவல்லி வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

  தினமும் உற்சவ அம்ம னுக்கு பூஜைகள், தீபாரதனை கள் நடைபெற்று அதன்பின் துர்க்கை அம்மனுக்கு பூஜை கள் நடைபெற்று வருகிறது. தினமும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனையும் கொலு அலங்காரத்தையும் தரிசித்து செல்கின்றனர்.

  நவராத்தி விழாவுக்கான பூஜைகளை ராஜேஷ் பட்டர், குமார் பட்டர் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் நடத்தி வருகின்றனர். தினமும் மாலையில் கோவில் மண்ட பத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

  இதேபோல் வேதியே ரேந்தல் விலக்கில் உள்ள பஞ்சபூதேஸ்வரம் மகாபஞ்ச முக பிரித்தியங்கிரா தேவி கோவிலில்3 ஆயிரம் சுவாமி பொம்மைகள் வைத்து பிரம்மாண்டமான கொலு வைக்கப்பட்டு உள்ளது.

  மேலெநெட்டூர் சொர்ண வாரீஸ்வரர் சாந்த நாயகி அம்மன்கோவில், செங்கோட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆகிய கோவில்களிலும் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது.

  • பொது விநியோக குறைதீர் முகாம் நாளை நடக்கிறது.
  • இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  சிவகங்கை

  சிவகங்கை மாவட்டம் பொது விநியோகத்திட்டத்தில் நாளை (14-ந் தேதி) அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகலட்டை, கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவிக்கலாம். தாங்கள் குடியிருக்கும் வட்டத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் மனுக்களை அளிக்கலாம்.

  இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
  • இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு மருந்துகள், மாத்திரைகள் வழங்கப்பட்டன.

  தேவகோட்டை

  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. ஒன்றிய சேர்மன் பிர்லாகணேசன், மாவட்ட கவுன்சிலர் நாகனி செந்தில்குமார், கண்டதேவி ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரவல்லி முருகன், முருகன், வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் முருகன், வட்டார மருத்துவ அலுவலர் சாம் ஜேஷுரன் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ பெட்டகங்கள் வழங்கப்பட்டது. ரத்த அழுத்தம், ரத்த அளவு, ரத்த சர்க்கரை அளவு மற்றும் ரத்த பரிசோதனைகள், சளி மாதிரி பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது, இயற்கை உணவு தானியங்கள், அதிக சத்துள்ள காய்கறிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

  சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தேவகோட்டை அரசு பொது மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முகாமில் பங்கேற்றனர். முகாமுக்கு வந்த பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு மருந்துகள், மாத்திரைகள் வழங்கப்பட்டன.

  • கல்லூரி கருத்தரங்கு நடந்தது.
  • பேராசிரியை நாகஜோதி நன்றி கூறினார்.

  மானாமதுரை

  சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஜாகிர்உசேன் கல்லூரியில் வணிகவியல் (கணிப்பொறி பயன்பாடு) துறை சார்பில் "டிஜிட்டல் உலகில் தொழில்முனைவோர்களுக்கான புதுமை திட்டங்கள்" என்னும் தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான் தலைமை தாங்கினார். துறைத்தலைவர் நாசர் வரவேற்றார். முதல் அமர்வில் நைஜீரியா, ஆப்பிரிக்கா பல்கலைக்கழகம், மேலாண்மை அறிவியல் துறை, இணைப்பேராசிரியர் ராஜன் துரைராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பேராசிரியர் வெங்கடேசன் பங்கேற்றார். பேராசிரியர் அருள் சேவியர் விக்டர் நன்றி கூறினார்.

  2-வது அமர்வில் பேராசிரியர் அரபாத் அலி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக உஸ்பெகிஸ்தான், தொழில் நுட்பத்துறை இணைப்பேராசிரியர் சுபைர் அலி கலந்துகொண்டார். முடிவில் பேராசிரியர் அரபாத் ஹசன் நன்றி கூறினார். நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், நிறுவன மேலாண்மை துறை, மூத்த பேராசிரியர், வேதிராஜன் கலந்துகொண்டு பேசினார். பேராசிரியை நாகஜோதி நன்றி கூறினார். 

  • சதுரங்க போட்டி நடந்தது.
  • மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

   சிவகங்கை

  சிவகங்கை மாவட்ட சதுரங்க கழகத்தின் சாணக்யா அகாடமி ஒருங்கிணைப்பில் சதுரங்க போட்டி மான்போர்ட் பள்ளியில்நடந்தது. 7 வயது, 9 வயது, 11 வயது, 13 வயது, 15 வயது என 5 பிரிவுகளில் இந்த போட்டிகள் நடைபெற்றன. இதில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பள்ளிகளில் இருந்து மொத்தம் 235 மாணவர்கள் கலந்து கொண்டனர். மான்போர்ட் பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் இக்னேஷியஸ் தாஸ் தலைமை வகித்தார்.

  சதுரங்க போட்டிகளுக்கு சிவகங்கை மாவட்ட இளைஞர் நலன் மற்றும் மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் ரமேஷ் கண்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாலையில் நடைபெற்ற போட்டிகளுக்கு சிவகங்கை மருத்துவக்கல்லூரி தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை பிரிவின் துறை தலைவர் டாக்டர் ஜிம் திவாகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். போட்டி முடிவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை சாணக்கியா அகாடமி ஒருங்கிணைத்து நடத்தியது.

  • ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டியில் சிவகங்கை அணி வெற்றி பெற்றது.
  • மாணவர்களும் பெற்றோர்களும் நன்றி தெரிவித்தனர்.

  காரைக்குடி

  மாநில அளவிலான 11-வது ஜூனியர் ரோல் பால் ஸ்கேட்டிங் போட்டிகள் திருச்சியில் நடைபெற்றது.இதில் சிவகங்கை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட 16 மாவட்ட அணி கள் பங்கேற்று விளையாடி யது.

  சிவகங்கை மாவட்ட அணி லீக் சுற்றுகளில் திண் டுக்கல், திருச்சி அணிகளை வீழ்த்தி காலிறுதி போட்டி யில் மதுரையை வென்றது.பின்பு நடைபெற்ற அரை இறுதி போட்டியில் செங்கல் பட்டு அணியை வென்று இறுதி போட்டிக்கு முன் னேறியது. இறுதி போட்டி யில் கோயமுத்தூர் அணியி டம் தோல்வி அடைந்து 2-ம் இடத்தை பிடித்து வெள்ளி பதக்கத்தை வென்றது.

  சிவகங்கை மாவட்ட அணியில் விளையாடிய தருண், தீபேஷ், வெற்றிவேல், ஸ்ரீராம், கிஷோர், விஷ்வா, இளமாறன், பிரனேஷ், ஜஸ்வந்த் பெருமாள், ஆதித்யா, காஞ்சி ரித்தீஷ், அபிஷேக் ஆகிய மாணவர் களை ஆசிரியர்கள் பெற் றோர்கள் பாராட்டினர்.சிறப்பாக பயிற்சி அளித்த பயிற்சியாளர்கள் தபேந்தி ரன், பாலா, வைத்தீஸ்வரன், தயாளன் ஆகியோர்களுக்கு மாணவர்களும் பெற்றோர்களும் நன்றி தெரிவித்தனர்.

  • ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • 5-வது அமைப்பு தேர்தல் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

  சிவகங்கை

  சிவகங்கை மாவட்டத்தில் ம.தி.மு.க.உட்கட்சி தேர்தல் நடந்தது. இதில் மாவட்ட செயலாளராக காரைக்குடியை சேர்ந்த பசும்பொன் மனோகரன் உள்பட மாவட்ட நிர்வாகிகள் 17 பேர் தேர்வு செய்யப்பட்டனர். வைகோவின் மகன் துரை வைகோ ம.தி.மு.க.வின் செயலாளராக பதவியேற்க அக்கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் கட்சியை தாய் கழகமான தி.மு.க.வுடன் இணைக்க கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் எதிர்ப்பு தெரிவித்த மாவட்ட செயலாளர்கள் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கப்பட்டனர்.

  இந்த நிலையில் ம.தி.மு.க.வின் உட்கட்சி தேர்தலான 5-வது அமைப்பு தேர்தல் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ம.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் சிவகங்கை மாவட்ட தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியான நிலையில் சிவகங்கையில் உள்ள தனியார் மகாலில் துணை பொது செயலாளரான ராஜேந்திரன் தேர்தல் ஆணையாளராகவும், பொன்முடி, செல்வராஜ் துணை ஆணையாளராகவும் நியமிக்கப்பட்ட நிலையில் அவர்கள் முன்னிலையில் இந்த தேர்தல் நடைபெற்றது. இதில் அதிக வாக்குகள் பெற்று மாவட்ட செயலாளராக காரைக்குடியை சேர்ந்த பசும்பொன் மனோகரனும், அவைத்தலைவராக திருப்பத்தூர் கருப்பூரை சேர்ந்த சந்திரன், பொருளாளராக காளையார்கோவிலை சேர்ந்த சார்லஸ் மற்றும் துணை செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் என 17 பேர் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக்கொண்டனர்.