என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அஜித்குமார் விவகாரம்: புகார் அளித்த நிகிதா மீது ஏற்கனவே பண மோசடி வழக்கு
- காவலாளி அஜித் குமார் மீது புகார் கொடுத்த நிகிதா மீது ஏற்கனவே பண மோசடி வழக்கு உள்ளது.
- 2010-ல் துணை முதல்வரின் உதவியாளரை தெரியும் என்று கூறி நிகிதா மோசடி செய்துள்ளார்.
சென்னை:
திருப்புவனம் சம்பவம் தொடர்பாக 5 போலீசார் மீது மட்டுமே தற்போது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகளில் போலீஸ் சூப்பிரண்டு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். டி.எஸ்.பி. சஸ்பெண்டு செய்யப்பட்டு இருக்கிறார்.
சி.பி.ஐ. அதிகாரிகள் இன்னும் சில தினங்களில் காவலாளி அஜித்குமார் கொலை தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் பெற்று அதிரடி விசாரணையில் ஈடுபட உள்ளனர்.
காவலாளி அஜித் குமாரை கண்மூடித்தனமாக தாக்குவதற்கு உத்தரவிட்டது யார்? என்பது போன்ற கேள்விகளை முக்கியமாக கேட்டு விசாரிக்க உள்ளனர்.
இந்நிலையில் காவலாளி அஜித் குமார் மீது புகார் கொடுத்த நிகிதா மீது ஏற்கனவே பண மோசடி வழக்கு உள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும் வேலை வாங்கித் தருவதாக ரூ.16 லட்சம் வரை மோசடி செய்ததாக 2011-ல் நிகிதா மீது FIR உள்ளது.
2010-ல் துணை முதல்வரின் உதவியாளரை தெரியும் என்று கூறி நிகிதா மோசடி செய்துள்ளார். பணத்தைக் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்ட போது நிகிதா குடும்பத்தினர் மிரட்டியது தெரியவந்துள்ளது.






