என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PragGnanandhaa"

    • 4-வது சுற்றில் அதிவேகமாக காய் நகர்த்தும் டைபிரேக்கர் நடந்தது.
    • ரஷியாவின் டேனில் துபோவுடன் மோதிய இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா முதல் ஆட்டத்தை டிரா செய்தார்.

    கோவா:

    11-வது உலகக் கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் 4-வது சுற்றில் அதிவேகமாக காய் நகர்த்தும் டைபிரேக்கர் நேற்று நடந்தது. ரஷியாவின் டேனில் துபோவுடன் மோதிய இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா முதல் ஆட்டத்தை டிரா செய்தார். அடுத்த ஆட்டத்தில் 53-வது நகர்த்தலில் தோல்வியை தழுவினார். முடிவில் பிரக்ஞானந்தா 1.5-2.5 புள்ளி கணக்கில் தோற்று வெளியேறினார். கடந்த முறை இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்த பிரக்ஞானந்தா இந்த தடவை 4-வது சுற்றுடன் நடையை கட்டியிருக்கிறார்.

    மற்றொரு இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி டைபிரேக்கரில் 2 ஆட்டங்களிலும் ஹங்கேரியின் பீட்டர் லெகோவை பதம் பார்த்து (3-1) கால்இறுதிக்கு முந்தைய 5-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இதேபோல் இந்தியாவின் ஹரிகிருஷ்ணா சுவீடனின் நில்ஸ் கிரான்ட்லிசை வீழ்த்தினார்.

    • 2-வது ஆட்டத்தில் பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, அரி கிருஷ்ணா ஆகியோர் மோதிய ஆட்டம் ‘டிரா’ ஆனது.
    • பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, அரி கிருஷ்ணா ஆகிய 3 பேரும் இன்றைய டை பிரேக்கரில் மோதுகிறார்கள்.

    பனாஜி:

    11-வது பீடே உலக கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. வருகிற 26-ந் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டி 8 சுற்றுகளை கொண்டது. நாக்அவுட் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியில் 82 நாடுகளில் இருந்து 206 வீரா்கள் பங்கேற்றனர்.

    3-வது சுற்றின் முடிவில் அர்ஜூன் எரிகைசி, பிரக்ஞானந்தா, பிரணவ், அரி கிருஷ்ணா, கார்த்திக் வெங்கட்ராமன் ஆகிய 5 இந்திய வீரர்கள் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

    4-வது சுற்று நேற்று முன்தினம் தொடங்கியது. சென்னையை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா ரஷிய வீரர் டேனியல் டுபோவுடனும், அர்ஜூன் எரிகைசி அங் கேரி வீரர் பீட்டர் லிகோவு டனும், பிரணவ் உஸ்பெகிஸ் தான் வீரர் நோடிர் பெக்குடனும், அரிகிருஷ்ணா சுவீ டனை சேர்ந்த நில்ஸ் கிராண்டிலியசுடனும், கார்த்திக் வெங்கட்ராமன் வியட்நாம் வீரர் லீம் லெகு வாங்குடனும் மோதினார்கள். 5 வீரர்களும் முதல ஆட்டத்தில் 'டிரா'செய்தனர்.

    நேற்றைய 2-வது ஆட்டத்தில் பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, அரி கிருஷ்ணா ஆகியோர் மோதிய ஆட்டம் 'டிரா' ஆனது. பிரணவ், கார்த்திக், வெங்கட்ராமன் ஆகியோர் 2-வது ஆட்டத்தில் தோற்று வெளியேறினார்கள்.

    பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, அரி கிருஷ்ணா ஆகிய 3 பேரும் இன்றைய டை பிரேக்கரில் மோதுகிறார்கள். இதில் வெற்றி பெற்று 5-வது சுற்றுக்கு நுழைவார்களா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    • தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, ரஷியாவின் டேனில் துபோவை எதிர்கொண்டார்.
    • இந்திய முன்னணி வீரர் அர்ஜூன் எரிகைசி, ஹங்கேரி கிராண்ட்மாஸ்டர் பீட்டர் லெகோவை சந்தித்தார்.

    கோவா:

    'பிடே' 11-வது உலகக் கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடந்து வருகிறது. 8 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் ஒவ்வொரு சுற்றிலும் 2 ஆட்டங்கள் இடம் பெறும். எதிர்பார்க்கப்பட்ட உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், விதித் குஜராத்தி 3-வது சுற்றுடன் நடையை கட்டினர்.

    இந்த நிலையில் போட்டியின் 4-வது சுற்றில் முதல் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் ஒரு ஆட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, ரஷியாவின் டேனில் துபோவை எதிர்கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 'ரிஸ்க்' எடுக்க விரும்பவில்லை. 41-வது நகர்த்தலில் டிரா கண்டார். இவர்கள் இருவரும் இன்று மீண்டும் மோத உள்ளனர். இதில் வெற்றி பெறும் வீரர் 5-வது சுற்றுக்கு முன்னேறுவார். இதிலும் சமநிலை நீடித்தால் ஆட்டம் டைபிரேக்கருக்கு நகரும்.

    மற்றொரு இந்திய முன்னணி வீரர் அர்ஜூன் எரிகைசி, ஹங்கேரி கிராண்ட்மாஸ்டர் பீட்டர் லெகோவை சந்தித்தார். 20-வது நகர்த்தலிலேயே இருவரும் டிராவுக்கு ஒப்புக் கொண்டனர். இதே போல் கார்த்திக் வெங்கட்ராமன், பிரணவ், ஹரிகிருஷ்ணா ஆகிய இந்தியர்களும் தங்களது ஆட்டங்களை டிராவில் முடித்தனர். இன்று 4-வது சுற்றில் 2-வது ஆட்டம் நடைபெறும்.

    • 11-வது பீடே உலக கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது.
    • நாக்அவுட் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியில் 82 நாடுகளில் இருந்து 206 வீரா்கள் பங்கேற்றனர்.

    பனாஜி:

    11-வது பீடே உலக கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. வருகிற 26-ந் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டி 8 சுற்றுகளை கொண்டது. நாக்அவுட் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியில் 82 நாடுகளில் இருந்து 206 வீரா்கள் பங்கேற்றனர்.

    முதல் சுற்றில் 156 பேர் ஆடினார்கள். இதன் முடிவில் 78 வீரர்கள் அடுத்த ரவுண்டுக்கு முன்னேறினார்கள். உலக சாம்பியன் டி.குகேஷ் உள்ளிட்ட 'டாப்-50' வீரர்கள் நேரடியாக 2-வது சுற்றில் இடம் பெற்றனர். 2-வது சுற்று முடிவில் 74 பேர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்கள். 3-வது சுற்று கடந்த 7-ந் தேதி தொடங்கியது. இந்த சுற்றுக்கு 10 இந்திய வீரர்கள் தகுதி பெற்று இருந்தனர்.

    3-வது சுற்றின் முடிவில் அர்ஜூன் எரிகைசி, பிரக்ஞானந்தா, பிரணவ், அரி கிருஷ்ணா, கார்த்திக் வெங்கட்ராமன் ஆகிய 5 இந்திய வீரர்கள் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

    விதித் குஜராத்தி, எஸ்.எல்.நாராயணன், உலக சாம்பியன் டி.குகேஷ், பிரனேஷ், தீப்தியான் கோஷ் ஆகிய 5 வீரர்களும் 3-வது சுற்றில் தோற்று வெளியேறினார்கள்.

    இன்று ஓய்வு நாளாகும். 4-வது சுற்று ஆட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. அன்று முதல் ஆட்டமும், 12-ந்தேதி 2-வது ஆட்டமும், தேவைப்பட்டால் 13-ந்தேதி டை பிரேக்கரும் நடைபெறும். இந்த சுற்றில் மொத்தம் 32 வீரர்கள் ஆடுவார்கள்.

    சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா 4-வது சுற்றில் ரஷிய வீரர் டேனியல் டுபோவுடன் மோதுகிறார். அர்ஜூன் எரிகைசி அங்கேரியை சேர்ந்த பீட்டர் லிகோவை சந்திக்கிறார்.

    பிரணவ் உஸ்பெகிஸ் தான் வீரர் நோடிர் பெக்குடனும், அரிகிருஷ்ணா சுவீடனை சேர்ந்த நில்ஸ் கிராண்டிலியசுடனும், கார்த்திக் வெங்கட்ராமன் வியட்நாம் வீரர் லீம் லெகுவாங்குடனும் மோதுகிறார்கள்.

    • அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் Freestyle செஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • கடந்த 3 நாட்களில் கார்ல்சனை 2வது முறையாக வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தியுள்ளார்.

    உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா மீண்டும் வீழ்த்தினார்.

    அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்று வரும் Freestyle செஸ் தொடரில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 43வது நகர்வில் வெற்றி பெற்றார்.

    கடந்த 3 நாட்களில் கார்ல்சனை 2வது முறையாக வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தியுள்ளார்.

    • ரேபிட் செஸ் போட்டியின் 4வது சுற்றில் உலகின் நம்பர் 1 செஸ் வீரர் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.
    • ரேபிட் செஸ் போட்டியின் புள்ளிப் பட்டியலில் பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்து அசத்தினார்.

    உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனை தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தியுள்ளார்.

    அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்று வரும் ரேபிட் செஸ் போட்டியின் 4வது சுற்றில் உலகின் நம்பர் 1 செஸ் வீரர் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.

    இதன்மூலம் ரேபிட் செஸ் போட்டியின் புள்ளிப் பட்டியலில் பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்து அசத்தினார். 

    • 10 சுற்றுகளின் முடிவில் மூன்று வீரர்கள் 5.5 புள்ளிகளை பெற்றதால் சாம்பியனை தீர்மானிக்க டைபிரேக்கர் ஆட்டம் நடத்தப்பட்டது.
    • சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு 17லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

    தாஷ்கென்ட்:

    உஸ்பெகிஸ்தானின் தாஷ்கென்ட் நகரில் மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் தொடர் நடைபெற்றது. இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உட்பட உலகின் 10 முன்னணி வீரர்கள் பங்கேற்றனர்.

    இந்த தொடரில் 10 சுற்றுகளின் முடிவில் மூன்று வீரர்கள் 5.5 புள்ளிகளை பெற்றதால் சாம்பியனை தீர்மானிக்க டைபிரேக்கர் ஆட்டம் நடத்தப்பட்டது. இரண்டு சுற்றுகளாக நடைபெற்ற டைபிரேக்கரில் 1.5 புள்ளிகளை பெற்று பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு 17லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

    இந்த வெற்றியின் மூலம் சர்வதேச செஸ் தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள குகேஷை பின்னுக்கு தள்ளி 4-வது இடத்திற்கு பிரக்ஞானந்தா முன்னேறியுள்ளார். இதன்மூலம் வரலாற்றில் முதன்முறையாக தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் டாப் 5 இடத்திற்கு இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

    • சூப்பர் பெட் கிளாசிக் செஸ் போட்டி ருமேனியா நாட்டில் நடைபெற்றது.
    • இந்த தொடரில் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.

    புகரெஸ்ட்:

    சூப்பர் பெட் கிளாசிக் செஸ் போட்டி ருமேனியா நாட்டில் நடைபெற்றது. இந்த தொடரில் 10 சுற்றுகள் நடந்து முடிந்த நிலையில் 5.5 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா,பிரான்சின் மாக்சிம் வச்சியர்-லக்ரேவ், அலிரேசா பிரூஸ்ஜா ஆகியோருடன் சமநிலையில் இருந்தார்.

    இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் முதல் 2 டை பிரேக்கர் போட்டிகள் சமனில் முடிவடைந்த நிலையில் 3-வது டை பிரேக்கரில் வச்சியர்-லக்ரேவை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.

    இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ருமேனியா சூப்பர் பெட் செஸ் கிளாசிக் தொடரில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள் கிளாசிக்கல் மற்றும் பிளிட்ஸ் சுற்றுகளில் அவரது அசாத்திய திறமை வெளிப்பட்டது. செஸ் போட்டிகளில் இந்த அற்புதமான தருணத்தை தமிழ்நாடு கொண்டாடுகிறது என முதலமைச்சர் கூறினார்.

    • வச்சியர்-லக்ரேவை வீழ்த்தி 1 புள்ளியை பெற்று சாம்பியன் பட்டத்தை பிரக்ஞானந்தா வென்றார்.
    • இந்த தொடரில் குகேஷ் 6-ம் இடம் பிடித்தார்.

    ருமேனியாவில் சூப்பர்பெட் கிளாசிக் (Superbet Classic) சர்வதேச செஸ் தொடர் நடைபெற்று வந்தது. இந்த தொடரில் 10 சுற்றுகள் நடந்து முடிந்த நிலையில் 5.5 புள்ளிகளுடன் ஆர்.பிரக்ஞானந்தா, பிரான்ஸ் நாட்டின் கிராண்ட் மாஸ்டர்களான பிரான்ஸின் வச்சியர்-லக்ரேவ், அலிரேசா ஃபிரூஸ்ஜா ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்.

    இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க டை-பிரேக்கர் நடத்தப்பட்டது. முதல் டை-பிரேக்கரில் அலிரேசா ஃபிரூஸ்ஜா மற்றும் பிரக்ஞானந்தா விளையாடினர். ஆட்டம் டிரா ஆனதால் தலா 0.5 புள்ளிகள் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து நடைபெற்ற 2-வது டை-பிரேக்கரில் வச்சியர்-லக்ரேவ், அலிரேசா ஃபிரூஸ்ஜா இடையிலான ஆட்டம் டிரா ஆனது. 3-வது டை-பிரேக்கரில் பிரக்ஞானந்தா, வச்சியர்-லக்ரேவை வீழ்த்தி 1 புள்ளியை பெற்றதோடு சாம்பியன் பட்டத்தையும் வென்றார். இது பிரக்ஞானந்தா வென்றுள்ள முதல் கிராண்ட் செஸ் டூர் பட்டமாகும்.

    இந்த தொடரில் குகேஷ் 6-ம் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உலகக் கோப்பை போட்டியில் விளையாட பிரக்ஞானந்தா தகுதி பெற்றுள்ளார்.
    • தமிழகத்தைச் சேர்ந்த நந்திதா 7.5 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தினார்.

    டெல்லியில் நடைபெற்று வரும் ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா தங்கம் வென்று அசத்தினார். 9 சுற்றுகள் கொண்ட தொடரில் 7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார் பிரக்ஞானந்தா. இதன்மூலம் உலகக் கோப்பை போட்டியில் விளையாட பிரக்ஞானந்தா தகுதி பெற்றுள்ளார்.

    முன்னதாக மகளிர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த நந்திதா 7.5 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தினார். அத்துடன் உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெற்றுள்ளார்.

    முன்னதாக சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் ஆடவர் அணி மற்றும் மகளிர் அணி வெண்கலப் பதக்கம் வென்றிருந்து. தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.குகேஷ் தங்கப்பதக்கம், பிரக்ஞானந்தா வெண்கல பதக்கம் மற்றும் வைஷாலி வெண்கலப் பதக்கமும் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாற்றுத்திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
    • தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.

    புதுடெல்லி:

    சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருதும், சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும், வாழ்நாள் சாதனையாளருக்கு தயான் சந்த் விருதும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது.

    இதில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. இதே போல் தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன், மாற்றுத்திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

    டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில் வீரர், வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவித்தார். இதில் மொத்தம் 25 பேருக்கு அர்ஜுனா விருது, 4 பேருக்கு துரோணாச்சார்யா விருது, 4 பேருக்கு தியான்சந்த் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் 7 டைபிரேக் ஆட்டங்களுக்குப் பிறகு பிரக்ஞானந்தா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
    • அரையிறுதி சுற்றில் உலகின் 3-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பேபியானோ கருணாவை பிரக்ஞானந்தா எதிர்கொள்ள உள்ளார்.

    உலகக் கோப்பை செஸ் போட்டி அசர்பைஜான் நாட்டின் பெக்கு நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 30ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 206 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இந்த தொடரில் காலிறுதி சுற்றில் சக இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசியுடன் தமிழக வீரர் பிரக்ஞானந்தா மோதினார். பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் 7 டைபிரேக் ஆட்டங்களுக்குப் பிறகு பிரக்ஞானந்தா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

    உலகக் கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறிய 2வது இந்திய வீரர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா படைத்தார். அடுத்து நடைபெறும் அரையிறுதி சுற்றில் உலகின் 3-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பேபியானோ கருணாவை பிரக்ஞானந்தா எதிர்கொள்ள உள்ளார்.

    இந்நிலையில், உலகக் கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அர்ஜூன் எரிகைசியும் சிறப்பாக தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

    ×