என் மலர்
நீங்கள் தேடியது "ஸ்ரீராம்சேனா தலைவர்"
- விஷ நீரை குடித்த 11 பள்ளி மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
- முஸ்லிம் தலைமை ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்ற இந்த கொடும் செயலை இந்துத்துவ கும்பல் செய்துள்ளது.
கர்நாடகா மாநில பெலகாவி மாவட்டம் ஹுல்லிகட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த கன்னட அரசு பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மர்ம நபர்கள் பூச்சிக்கொல்லி மருந்து கலந்துள்ளனர். இந்த விஷ நீரை குடித்த 11 பள்ளி மாணவர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் யாரும் உயிரிழக்கவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் 3 பேரை கைது செய்தனர். அதில், இந்து வலதுசாரி அமைப்பான ஸ்ரீராம் சேனா அமைப்பின் அப்பகுதி தலைவரும் அடக்கம்.
கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், "சம்பந்தப்பட்ட பள்ளியில் முஸ்லிம் தலைமை ஆசிரியர் பணியாற்றி வருவதாகவும் அவர் மீது பழி சுமத்தி வேறு பள்ளிக்கு மாற்றுவதற்காக தான் பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்ததாக" தெரிவித்தனர்.
முஸ்லிம் தலைமை ஆசிரியர் மீதான மத வெறுப்பால் பள்ளி தண்ணீர் தொட்டியில் இந்து வலதுசாரி கும்பல் விஷம் கலந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு கண்டித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "மத அடிப்படைவாதமும் வகுப்புவாத வெறுப்பும் கொடூரமான செயல்களுக்கு வழிவகுக்கும், மேலும் அப்பாவி குழந்தைகள் படுகொலை செய்யப்படுவதற்கு வழிவகுத்திருக்கக்கூடிய இந்த சம்பவம் அதற்கு ஒரு சான்றாகும்" என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்
- ஸ்ரீராம் சேனா தர்மத்திற்கு எதிரான நாத்திகர்களை வீட்டுக்கு அனுப்பும்.
- தமிழகத்தில் மதமாற்றம் அதிக அளவில் நடக்கிறது.
இந்துக்கள் 3 ஆவது குழந்தை பெற்றால் 1 லட்சமும் 4வது குழந்தை பெற்றால் ரூ.2 லட்சமும் வழங்கப்படும் என்று ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் தெரிவித்துள்ளார்.
ஓசூரில் நடைபெற்ற ஸ்ரீராம் சேனா அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பிரமோத் முத்தாலி இவ்வாறு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பேசிய பிரமோத் முத்தாலிக், "ஸ்ரீராம் சேனா அரசியல் செய்யாது. அனால் தர்மத்திற்கு எதிரான நாத்திகர்களை வீட்டுக்கு அனுப்பும். தமிழகத்தில் ஜிகாதி மற்றும் மதமாற்றம் அதிக அளவில் நடக்கிறது. அதற்கு திமுக அரசு ஆதரவு அளித்து வருகிறது" என்று தெரிவித்தார்.
இந்துத்துவா அமைப்புகளை கடுமையாக விமர்சித்து கட்டுரை எழுதிய பிரபல கர்நாடக பெண் எழுத்தாளர் கவுரி லங்கேஷ் கடந்த ஆண்டு மர்ம நபர்களால் பெங்களூருவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த படுகொலை தொடர்பாக பிரதமர் மோடி கருத்து தெரிவிக்காதது ஏன்? என்று அண்மையில் காங்கிரஸ் தலைவர் மணிஷ் திவாரி கேள்வி எழுப்பி இருந்தார்.
இதுபற்றி ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தலிக் நேற்றுமுன்தினம் பெங்களூருவில் கூறும்போது, “இடது சாரி ஆதரவு அறிவாளிகள் கவுரி லங்கேஷ் கொலை பற்றி பிரதமர் மோடி ஏன் மவுனம் சாதிக்கிறார் என்று தொடர்ந்து கேள்வி எழுப்புகின்றனர். கர்நாடகாவில் சாகும் ஒவ்வொரு நாய்க்காகவும் மோடி பதில் அளிக்க வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
அவருடைய இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கொலை செய்யப்பட்ட கவுரி லங்கேஷை இழிவு படுத்துவதுபோல் உள்ளது என்று கடும் எதிர்ப்பும் எழுந்தது.
இதற்கு நேற்று பதில் அளித்த பிரமோத் முத்தலிக் கூறும்போது, “கவுரி லங்கேஷை நாயுடன் நான் ஒப்பிடவில்லை. அவரை இழிவுபடுத்தும் எண்ணமும் கிடையாது. மாநிலத்தில் நடக்கும் ஒவ்வொரு இறப்புக்கும் பிரதமர் மோடி பதில் அளிக்கவேண்டுமா? என்பதைத்தான் சுட்டிக்காட்டினேன்” என்றார். #GauriLankesh #Murder #PramodMuthalik #tamilnews






