என் மலர்
நீங்கள் தேடியது "ஸ்ரீராம்"
- பசு பால் கொடுக்கவில்லை என்றால் ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்
- மத்திய அரசின் நோக்கங்கள் தெளிவாக உள்ளன
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும்நிலையில் மத்திய அரசு பல மசோதாக்களை தாக்கல் செய்து, அவை நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு மாற்றாக, 'விபி-ஜி ராம் ஜி' என்னும் புதிய மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது.
முன்னதாக, இந்த "விபி-ஜி ராம் ஜி மசோதா" நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது உத்தரகண்ட் நைனிடால் மக்களவை உறுப்பினர் அஜய் பட் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மசோதா தொடர்பாக பேசிய அஜய் பாட், "ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை என்றால், வேலை கிடைக்கவில்லை என்றால், வீட்டில் பிரச்சனை இருந்தால், கணவன் மனைவிக்கு ஒத்துப்போகவில்லை என்றால், ஒரு மகன் வழிதவறிச் சென்றிருந்தால், அல்லது ஒரு பசு பால் கொடுக்கவில்லை என்றால், "ஸ்ரீ ராம், ஜெய் ராம், ஜெய் ஜெய் ராம்" என்று சொன்னால் போதும், அது நிறைவேறும்." என தெரிவித்தார்.
தொடர்ந்து மத்திய அரசின் நோக்கங்கள் தெளிவாக உள்ளன என்றும், மசோதா கொண்டுவரப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் தெரிவித்தார். தற்போது இவர் பேசிய அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- ஸ்ரீராம் சேனா தர்மத்திற்கு எதிரான நாத்திகர்களை வீட்டுக்கு அனுப்பும்.
- தமிழகத்தில் மதமாற்றம் அதிக அளவில் நடக்கிறது.
இந்துக்கள் 3 ஆவது குழந்தை பெற்றால் 1 லட்சமும் 4வது குழந்தை பெற்றால் ரூ.2 லட்சமும் வழங்கப்படும் என்று ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் தெரிவித்துள்ளார்.
ஓசூரில் நடைபெற்ற ஸ்ரீராம் சேனா அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பிரமோத் முத்தாலி இவ்வாறு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பேசிய பிரமோத் முத்தாலிக், "ஸ்ரீராம் சேனா அரசியல் செய்யாது. அனால் தர்மத்திற்கு எதிரான நாத்திகர்களை வீட்டுக்கு அனுப்பும். தமிழகத்தில் ஜிகாதி மற்றும் மதமாற்றம் அதிக அளவில் நடக்கிறது. அதற்கு திமுக அரசு ஆதரவு அளித்து வருகிறது" என்று தெரிவித்தார்.
- 'பசங்க' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீராம்
- சில படங்களில் கதாநாயகனாக நடித்தார்
'பசங்க' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீராம் . இவர் அதற்கு அடுத்து சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதற்கு பிறகு சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். இவர் கடைசியாக மணிரத்னம் உருவாக்கிய நவரசா இணைய தொடரில் நடித்து இருந்தார்.
இந்நிலையில் அவருக்கு திருமணம் நடைப்பெற்றுள்ளது. ஸ்ரீராம் தற்பொழுது ஒரு பயோ டெக் ஐடி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் நீண்ட நாள் காதலியான நிகில் பிரியாவை திருமணம் செய்துள்ளார். இவரது திருமண புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகிறது.








