என் மலர்

  செய்திகள்

  தக்கலை அருகே காதல் பிரச்சினையில் வாலிபர் தற்கொலை
  X

  தக்கலை அருகே காதல் பிரச்சினையில் வாலிபர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தக்கலை அருகே காதல் பிரச்சினையில் மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
  தக்கலை:

  தக்கலையை அடுத்த அப்பட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் அஜித் (வயது 23). அஜித் எஸ்.எஸ்.எல்.சி. படித்துவிட்டு கூலி வேலை செய்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக காதல் இருந்து வந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பிருந்து இவர்களின் காதலில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அஜித் மனம் உடைந்து காணப்பட்டார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். 

  அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தக்கலைஅரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அஜித் பரிதாபமாக இறந்தார். இது பற்றி தக்கலை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  இதேபோல் தக்கலையை அடுத்த மூலச்சல், உம்மச்சாணி விளையை சேர்ந்தவர் நடராஜன் (60). நாகர்கோவிலில் உள்ள ஒரு நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலையில் இருந்து விலகிய நடராஜன் வேறு வேலைக்கு முயற்சி செய்தார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் கடந்த 25-ந் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று காலை இறந்தார். இது பற்றியும் தக்கலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×