சேலத்தில் விஷம் குடித்த இளம்பெண் சாவு

குடும்பத் தகராறு காரணமாக கடந்த 13-ந் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இது குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகிறார்கள்.
சேலத்தில் விஷம் குடித்த இளம்பெண் சாவு
Published on

சேலம்:

சேலம் வாய்க்கால் பட்டறை அருகே உள்ள வால்காடு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி கலையரசி (வயது 34). இவர் குடும்பத் தகராறு காரணமாக கடந்த 13-ந் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கலையரசி இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com